தந்தையின் பாச போராட்டம்... பிணவறையில் இருந்து உயிருடன் எழுந்து வந்த நபர்... ஒடிசாவில் பரபரப்பு!

 
ஒடிசா

மரணத்தின் பிடியில் இருந்து தனது கணவனைக் காப்பாற்றிய சாவித்திரியின் கதையைக் கேட்டிருப்போம். அது போன்று தனது மகனின் உயிரை கிட்டத்தட்ட எமனிடம் இருந்து போராடி மீட்டுக் கொண்டு வந்துள்ளார் ஒரு பாச தந்தை. இன்னும் கொஞ்ச நேரம் கழித்து அந்த இளைஞரின் தந்தை வந்திருந்தால், பிணவறையில் வைத்து உயிரை இழந்திருப்பார் ஒடிசா ரயில் விபத்தில், படுகாயமடைந்து, உயிருக்குப் போராடிக் கொண்டிருந்த இளைஞர்.

நாடு முழுவதும் பெரும் சோகத்தை ஏற்படுத்திய ஒடிசா ரயில்விபத்தில், மீட்பு பணிகள் துரித கதியில் நடந்து முடிந்த நிலையில், உயிரிழந்தவர்களின் உடல்களை வண்டியில் ஒன்றின் மீது ஒன்றாக அலட்சியமாக குப்பைகளை அள்ளி வீசுவது போல வீசுகிற வீடியோ வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், தற்போது பிணவறையில் இருந்து ஒருவர் உயிருடன் எழுந்து வந்துள்ளது  மேலும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இந்த ரயில் விபத்தில் 288 பயணிகள் உயிரிழந்ததாக தகவல்கள் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டது. அதே சமயம் உயிரிழந்தவர்களை  மருத்துவர்கள் பரிசோதித்துப் பார்த்து, உயிரிழந்ததை உறுதி செய்த பிறகு தான் பிணவறைக்கு உடல்களை அனுப்ப வேண்டும். அப்படியிருக்கையில், இதன் மூலமாக மருத்துவர்கள் யாரும் பரிசோதிக்காமலேயே உடல்கள் பிணவறைக்கு கொண்டு சென்றுள்ளது அம்பலமாகி உள்ளது. 

ஒடிசா

 ரயில் விபத்தில் உயிரிழந்தவர்களின் உடல்களை வைப்பதற்காக பாலசோரில் உள்ள பள்ளியில் தற்காலிகமாக பிணவறை ஒன்று உருவாக்கப்பட்டிருந்தது. அதில், உயிரிழந்தவர்களின் உடல்கள் வைக்கப்பட்டிருந்தன.

அதே சமயம், மேற்கு வங்கத்தைச் சேர்ந்த பிஸ்வஜித் மாலிக் என்ற 24 வயது மகனை, அவரது தந்தைஹேலாராம், கோரமண்டல் ரயிலில் ஏற்றி அனுப்பி வைத்த நிலையில், விபத்து செய்தி கேட்டு மகனிடம் செல்போனில் பேசியுள்ளார். தான் படுகாயமடைந்த நிலையில், மோசமான நிலையில் இருப்பதாக தந்தையிடம் மகன் கூறியதையடுத்து, உடனடியாக தன்னுடைய நண்பரின் ஆம்புலன்சில் 230 கிமீ தூரம் பயணித்து விபத்து நடந்த இடத்துக்கு சென்று மகனைத் தேடி இருக்கிறார். எந்த மருத்துவமனையிலும் மகன் சிகிச்சைக்காக அனுமதிக்கப்படவில்லை. அதன் பிறகு தற்காலிய பிணவறை அமைக்கப்பட்டது கேள்விப்பட்டு, ஏதோ  பொறித்தட்டியவராய் மனதைத் திடப்படுத்திக் கொண்டு நம்பிக்கையோடு அங்கே சென்றுள்ளார். அவரை உள்ளே செல்ல அனுமதிக்கவில்லை. 

Odisha

வெளியே நின்றபடி இவர் உள்ளே செல்வதற்கு போராடிக் கொண்டிருந்த அதே நேரத்தில் மிக சரியாக உள்ளே பிணத்தை அடுக்கி வைத்து விட்டு வெளியே வந்து கொண்டிருந்தவர்களில் ஒருவரின் கால்களை யாரோ பிடித்து இழுப்பது தெரிந்தது. அலறியடித்தப்படி வெளியே ஓடி வந்தவர்கள் பின் முனகல் சப்தம் கேட்டு அருகே சென்று பார்த்த போது, பிஸ்வஜித், உயிருக்குப் போராடிய நிலையில், உயிருடன் இருந்துள்ளார். 

 
தகவல் தெரிந்து, மகனை ஆம்புலன்ஸில் அள்ளிப் போட்டுக் கொண்டு கொல்கத்தாவுக்கே அழைத்துச் சென்று சிகிச்சை அளித்து மீட்டிருக்கிறார் தந்தை ஹேலாராம். இந்த லட்சணத்தை உயிருடன் இருந்தவரையும் சேர்த்து குப்பையைப் போல பிணவறையில் வீசியிருக்கிறார்கள் மீட்பு பணிகளை செய்து கொண்டிருந்தவர்கள். 

ஒரே புடவைக்காக குடுமிபுடி சண்டைப்போட்ட இளம்பெண்! வைரலாகும் வீடியோ

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

அடிக்கிற வெய்யில்ல அடுப்பில்லாமலே ஆம்லெட் போடும் இளைஞர்... வைரல் வீடியோ!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்

From around the web