என் வீட்ல நீங்களே எதையாச்சும் வெச்சுட்டா ... சோதனையிட சென்ற போலீசாரிடம் ஃபெலிக்ஸ் மனைவி சரமாரி கேள்வி!

 
பெலிக்ஸ்

என் வீட்டில் சோதனையிட வருவதாக கூறிவிட்டு, நீங்களாகவே எதையாவது கொண்டு வந்து வெச்சுட்டா என்ன பண்றது? என்று சோதனையிட சென்ற போலீசாரிடம் யூ-ட்யூபர் ஃபெலிக்ஸ் மனைவி சரமாரியாக கேள்வி எழுப்பினார்.சிறையில் அடைக்கப்பட்டுள்ள யூ-ட்யூபர் ஃபெலிக்ஸ்   வீட்டில் போலீசார் சோதனையில் ஈடுபட சென்ற போது, அவர்களிடம் ஃபெலிக்ஸின்  மனைவி கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. 

பெலிக்ஸ்


டெல்லியில் கைது செய்யப்பட்ட ஃபெலிக்ஸை திருச்சி கூடுதல் மகிளா நீதிமன்ற நீதிபதி ஜெயப்பிரதா முன்பு ஆஜர்படுத்திய நிலையில், இந்த வழக்கை விசாரித்த நீதிபதி, ஃபெலிக்ஸை மே 27ம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிட்டார். 
இந்நிலையில், இன்று காலை சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள ஃபெலிக்ஸ் ஜெரால்டின் வீட்டிற்கு  சோதனையிட போலீசார் சென்று, சோதனையிடுவதற்கான நீதிமன்ற அனுமதியை காண்பித்தனர். அவர்களை வாசலிலேயே தடுத்து நிறுத்திய ஃபெலிக்ஸ் ஜெரால்டின் மனைவி ஜேன் ஆஸ்டின்,  "நீங்க எதையாவது உள்ளே வெச்சுட்டு போயிட்டா என்ன ஆகுறது?” என்று கேள்வி எழுப்பினார்.

போலீஸ்
அதன்பின்னர், “உங்களை நாங்க செக் பண்ண வேண்டும். வீட்டிற்குள்ளே எத்தனைப் பேரு வரப்போறீங்க?” என்று அடுக்கடுக்காக கேள்விகளை எழுப்பினார் ஆஸ்டின். அவருக்கு உரிய பதில்களை பொறுமையுடன் போலீசார் கூறினர்.  அதன் பின்னர் சோதனையிட வீட்டிற்குள் போலீசாரை அனுமதித்தார். 
தற்போது திருச்சி போலீசார், சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள ஃபெலிக்ஸ் ஜெரால்டின் வீடு மற்றும் அலுவலகத்தில் சோதனை நடத்தி வருகின்றனர்.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

இனி உச்சம்... பணமழை கொட்டப்போகும் ராசிகள்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!

From around the web