அதிர்ச்சி வீடியோ!! விளையாடிக் கொண்டிருந்தபோதே சரிந்து விழுந்து பலி!!

 
கங்காராம்

 

உலகம் முழுவதும் கொரோனா பரவலுக்கு பிறகு திடீர் உயிரிழப்புக்கள் அதிகரிக்க தொடங்கியுள்ளன. விளையாடிக் கொண்டிருக்கும் போதே சரிந்து விழுந்து பலி, மணமேடையில் சரிந்து பலி, நடனம் ஆடிக் கொண்டிருந்த போதே பலி, பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் திடீர் பலி , உடற்பயிற்சி செய்யும் போதே மயங்கி விழுந்து பலி என உயிரிழப்புக்கள் அதிகரித்து வருகின்றன. இவை பெரும் அதிர்ச்சியையும், அச்சத்தையும் பொதுமக்களிடையே ஏற்படுத்தி வருகிறது.


தெலங்கானா மாநிலம் ஜெகத்தியாளா நகரில் உள்ள கிளப்பில் ஷட்டில் விளையாடிக் கொண்டிருந்த நபர்  திடீரென சரிந்து விழுந்து உயிரிழந்தது பெரும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. ஜெகத்தியாளா கிளப்பில்  வெங்கடராஜ கங்காராம் செட்டில் விளையாடி கொண்டிருந்தார். இவருக்கு வயது 53. அப்போது திடீரென்று மாரடைப்பு ஏற்பட்டு அவர் மயங்கி சரிந்தார்.

ஆம்புலன்ஸ்
விளையாடிக் கொண்டிருந்தவர்கள் கங்காராம் மயங்கி சரிவதை கவனித்து உடனடியாக அவருக்கு  சிபிஆர் சிகிச்சை அளித்தனர். ஆனால் எந்த முன்னேற்றமும் காணப்படவில்லை. இதனையடுத்து  அவரை ஆம்புலன்ஸ் மூலம் அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு கங்காராமை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர். இச்செய்தி அங்கு பெரும் பரபரப்பையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. 

ஒரே புடவைக்காக குடுமிபுடி சண்டைப்போட்ட இளம்பெண்! வைரலாகும் வீடியோ

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

அடிக்கிற வெய்யில்ல அடுப்பில்லாமலே ஆம்லெட் போடும் இளைஞர்... வைரல் வீடியோ!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்

From around the web