அதிர்ச்சி... ஆம்னிப் பேருந்தில் பயணம் செய்த பெண் ஐடி ஊழியர் சடலமாக மீட்பு!

 
மகாலட்சுமி

 கோவை மாவட்டம் மதுக்கரை பாலத்துறை பகுதியில் வசித்து வருபவர்  மகாலட்சுமி. இவர் சென்னையில் ஐடி நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தார். கடந்த சில நாட்களாக உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டு இருந்த மகாலட்சுமி சென்னையில் இருந்து ஆம்னி பேருந்து மூலம்  கோவை திரும்பியுள்ளார். தனியார் சொகுசுப்பேருந்தில் கீழ் படுக்கையில் பயணம் செய்த மகாலட்சுமி கோவை காந்திபுரம் பகுதியில் பேருந்து நின்ற பிறகும் கீழே இறங்கவில்லை. 

ஆம்னி பேருந்து
இறங்க வேண்டிய இடம் வந்தும் அந்த பெண் இறங்காததால் சந்தேகத்தின் பேரில் ஓட்டுநர் மற்றும் நடத்துநர் அவரிடம் காந்திபுரம் வந்த தகவலை கூறினர். சத்தம் எதுவும் இல்லாமல் இருப்பதை கண்ட ஓட்டுனரும், நடத்துனரும் அதிர்ச்சி அடைந்தனர். உடனடியாக  108 ஆம்புலன்சிற்கு தகவல் அளிக்கப்பட்டது.   அங்கு வந்த ஆம்புலன்ஸ் ஊழியர்கள் மகாலட்சுமியை பரிசோதித்த போது அவர் ஏற்கனவே உயிரிழந்ததாக கூறினர்.

ஆம்புலன்ஸ்

இச்சம்பவம் குறித்து  போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.  சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் மகாலட்சுமி உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இச்சம்பவம் குறித்து  போலீசார் வழக்குப்பதிவு செய்து ஓட்டுநர் மற்றும் நடத்துநரிடம் தீவிர விசாரணை  மேற்கொண்டு  வருகின்றனர்.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

இனி உச்சம்... பணமழை கொட்டப்போகும் ராசிகள்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!

From around the web