மின்சாரம் தாக்கி பெண் தூய்மை பணியாளர் பலி… ரூ.20 லட்சம் நிவாரணத் தொகை!

 
வரலட்சுமி


சென்னையில் நள்ளிரவு முதலே பல பகுதிகளில் மழை பெய்து வருகிறது. இந்நிலையில் கண்ணகி நகரில் தூய்மைப் பணியாளராக பணிபுரிந்து வந்த  வரலட்சுமி என்ற பெண் பணியாளர் துப்புரவு வேலையை செய்து வந்தார். 

ஆம்புலன்ஸ்

இவர் தேங்கி நின்ற மழைநீரில் மின்சாரம் பாய்ந்து உயிரிழந்ததாக அதிர்ச்சி தரும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இச்சம்பவம் தூய்மை பணியாளர்களிடையே பெரும் அதிர்ச்சியையும்,  சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. சென்னையின் பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்த நிலையில், துரைப்பாக்கத்தில்  அதிகபட்சமாக 19 செ.மீ. மழை பதிவானது.  

சென்னையில் கொட்டித்தீர்த்த கனமழை.. மின்சாரம் பாய்ந்து தூய்மைப் பணியாளர் உயிரிழந்த விபரீதம்
இந்நிலையில், உயிரிழந்த வரலட்சுமியின் குடும்பத்திற்கு  ரூ.20 லட்சம் நிவாரண உதவி வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதில், மின்வாரியத்தின் சார்பில் ரூ.10 லட்சமும், தனியார் தூய்மைப்பணி ஒப்பந்த நிறுவனத்தின் சார்பில் ரூ.10 லட்சமும் வழங்கப்பட இருப்பதாக கூறப்படுகிறது. இச்சம்பவம் குறித்து  அதிகாரிகள் தீவிர விசாரணை மேற்கொண்டு  வருகின்றனர்.

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்

பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!

நாப்கின்களால் ஏற்படும் ரேசஸ் மற்றும் எரிச்சலை போக்க இயற்கை வழிகள்!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?