பிஃபா உலகக் கோப்பை: இன்று தகுதி சுற்று போட்டியில் இந்தியா - குவைத் மோதல்

 
பிஃபா உலகக் கோப்பை: இன்று தகுதி சுற்று போட்டியில் இந்தியா - குவைத் மோதல்

இன்று இரவு 7 மணிக்கு பிஃபா உலகக் கோப்பை கால்பந்து தொடருக்கான தகுதி சுற்று போட்டியில் இந்தியா - குவைத் அணிகள் மோதுகின்றன. இந்த போட்டி கொல்கத்தாவில் நடைபெற உள்ளது.

இன்றைய ஆட்டத்துடன் இந்திய கால்பந்து அணியின் கேப்டன் சுனில் சேத்ரி ஓய்வு பெறுகிறார். தகுதி சுற்று தொடரில் இந்திய அணி இறுதிக்கட்ட நிலைக்கு முன்னேற வேண்டுமானால் இன்றைய ஆட்டத்தில் கட்டாயம் வெற்றி பெற வேண்டும் என்ற நெருக்கடியுடன் களமிறங்குகிறது.


 

19 வருட கால்பந்து வாழ்க்கையில் இருந்து இன்றைய ஆட்டத்துடன் ஓய்வு பெற உள்ள 39 வயதான சுனில் சேத்ரி, வெற்றியுடன் விடைபெறுவதிலும் இந்திய அணியை அடுத்த கட்டத்துக்கு முன்னேறச் செய்வதிலும் கூடுதல் முனைப்பு காட்டுவார் என்பதால் இன்றைய போட்டி விறுவிறுப்பாக அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தகுதி சுற்றில் 'ஏ' பிரிவில் இடம் பெற்றுள்ள இந்திய அணி 4 புள்ளிகளுடன் 2வது இடத்தில் உள்ளது. கத்தார் 12 புள்ளிகளுடன் முதலிடம் வகிக்கிறது. ஆப்கானிஸ்தான் 4 புள்ளிகளுடன் 3வது இடத்திலும், குவைத் 3 புள்ளிகளுடன் கடைசி இடத்திலும் உள்ளன.

பிஃபா உலகக் கோப்பை: இன்று தகுதி சுற்று போட்டியில் இந்தியா - குவைத் மோதல்

இந்தியா, ஆப்கானிஸ்தான் அணிகள் ஒரே புள்ளிகளை பெற்றுள்ள போதிலும் கோல்கள் வித்தியாசத்தின் அடிப்படையில் இந்திய அணி 2வது இடத்தில் உள்ளது. ஆப்கானிஸ்தான் தனது கடைசி ஆட்டத்தில் பலம் வாய்ந்த கத்தார் அணியை வரும் 11ம் தேதி எதிர்கொள்கிறது. இந்த ஆட்டத்தில் ஆப்கானிஸ்தான் வெற்றி பெறுவது கடினம் என்றாலும், இன்றைய போட்டியில் இந்திய அணி குவைத்தை வீழ்த்தினால் அடுத்த சுற்றுக்கு முன்னேறுவதில் பிரச்சினை இருக்காது.

காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!

From around the web