அடுத்தடுத்து அதிர்ச்சி... 9 நாட்களில் 5வது பாலம் இடிந்து விழுந்தது!

 
பீகார் மதுபானி பாலம்

பீகார் மாநிலம் மதுபானி மாவட்டத்தில் ஆற்றின் குறுக்கே பாலம் கட்டப்பட்டு வருகிறது. ரூ.3 கோடி செலவில் கட்டப்படும் இந்தப் பாலம் 2021-ம் ஆண்டு முதல் கட்டப்பட்டு வருகிறது.பீகார் அரசின் ஊரகப் பணிகள் துறையால் இந்தப் பாலம் கட்டப்பட்டு வருகிறது.


இந்நிலையில் ஆற்றில் நீர்வரத்து அதிகரித்ததால் பாலத்தின் ஒரு பகுதி திடீரென இடிந்து விழுந்தது. இது தொடர்பான வீடியோ வெளியாகி உள்ளது. பீகாரில் தொடர்ந்து பாலம் இடிந்து விழுந்தது வருவது மாநிலம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பீகாரில் கடந்த 9 நாட்களில் 5 பாலங்கள் இடிந்து விழுந்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

கடந்த வார தொடக்கத்தில், பீகாரின் அராரியா, சிவான் மற்றும் கிழக்கு சம்பரான் மாவட்டங்களில் புதிதாக கட்டப்பட்ட பாலம் உட்பட மூன்று பாலங்கள் இடிந்து விழுந்தன, அதே நேரத்தில் மத்தியா ஆற்றின் மீது ஒரு பாலம் நேற்று இடிந்து விழுந்தது. பீகாரில் தொடர்ந்து 5 பாலங்கள் இடிந்து விழுந்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!

From around the web