வைரல் வீடியோ... விமானத்தில் பயணிகளிடையே அடிதடி சண்டை!

 
விமானத்தில் சண்டை
 

விமானப் பயணங்களில் சர்ச்சைகள் தொடர்கதையாகி வருகிறது. விமானம் பறந்து கொண்டிருந்த போது அவசர கதவை திறப்பது, பயணிகளை விட்டு உடமைகளை மட்டும் எடுத்துக் கொண்டு பறந்த விமானம், சக பயணியிடம் சண்டை, விமானப் பணிப்பெண்ணுடன் வாக்குவாதம் என ஒவ்வொரு சர்ச்சையும் முடியும் முன்னே மற்றொரு பிரச்சனை வந்து சேர்கிறது. அந்த வகையில் கிழக்கு ஆசியாவில் உள்ள தைவானில் இருந்து கலிபோர்னியா செல்லும் ஈ.வி.ஏ விமானத்தில் இருக்கைக்காக 2 பயணிகள் சண்டை போட்ட வீடியோ  தற்போது வைரலாகி வருகிறது. விமானத்தில் இருந்த பயணி ஒருவர், தனது செல்போனில் படம் எடுத்து  சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளார்.

விமானத்தில் அமர்ந்திருந்த பயணி ஒருவர், தொடர்ந்து இருமிக் கொண்டிருந்தார். இதனால், அவர் அருகே அமர்ந்திருந்த பயணி, காலியாக இருந்த ஒரு இருக்கையில் போய் அமர்ந்தார். காலியாக இருந்த சீட்டில் ஏற்கனவே அமர்ந்திருந்த பயணி அமர இருக்கைக்கு வந்தார். 

 
அப்போது இருக்கையில் இருந்து எழுந்திருக்குமாறு கேட்டார். அதற்கு அந்த பயணி மறுப்பு தெரிவித்துள்ளார். அதனால் அவர்கள் இருவருக்கும் சண்டை ஏற்பட்டது. வாக்குவாதம் முற்றிய நிலையில், இருவரும் ஒருவரை ஒருவர் சண்டையிட்டனர். அவர்களின் சண்டையை விலக்கி விட விமான ஊழியர்கள் போராடினர். அதற்காக பயணிகள் இருவரையும் பிடித்து சண்டையை நிறுத்த எவ்வளவோ முயற்சி செய்தனர். 

விமானத்தில் சண்டை

மறுபுறம் இருவருக்கும் இடையே நடந்த சண்டையைப் பார்த்து மற்ற பயணிகள் பீதியடைந்து அலறுவதை வீடியோவில் காணலாம். இறுதியாக, இருவரையும் சமாதானம் செய்து ஊழியர்கள் சோர்வடைந்து விட்டனர். விமானம் அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தின் சான் பிரான்சிஸ்கோவில் தரையிறங்கியதும் இருவரும் போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டனர்.  இதற்கிடையில், சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் இந்த வீடியோ 34 ஆயிரம் பார்வைகளைப் பெற்றுள்ளது, மேலும் விமான ஊழியர்களின் பொறுமை மற்றும் கடமை உணர்வை சமூகதளவாசிகள் பாராட்டியுள்ளனர்.  

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

இனி உச்சம்... பணமழை கொட்டப்போகும் ராசிகள்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!

From around the web