விடிஞ்சா கல்யாணம்... விஷம் குடித்த மணமக்கள்... புதுமாப்பிள்ளை மரணம்... தீவிர சிகிச்சையில் கல்யாணப் பெண்!

 
நிஷா

மத்திய பிரதேச மாநிலம் இந்தூரை சேர்ந்த தீபக், தனியார் நிறுவனம் ஒன்றில் பணிபுரிந்து வந்தார். இவருக்கும் அதேபகுதியை சேர்ந்த நிஷா என்ற இளம்பெண்ணுக்கும் ஓர் ஆண்டுக்கு முன்பு நிச்சயதார்த்தம் செய்யப்பட்டு இருந்தது. இந்தூரில் உள்ள ஆர்ய சமாஜ் ஹாலில் திருமணம் செய்ய முடிவு செய்யப்பட்டு நாள் குறிக்கப்பட்டது. 

அதன்படி, திருமணத்துக்கு முந்தைய நாளில் உற்சாக கொண்டாட்டத்துக்கு உறவினர்கள் அனைவரும் திருமணத்திற்கு வந்திருந்தனர். அங்கு சிறப்பான ஏற்பாடுகளுடன், இசை வாத்தியங்களுடன் திருமணத்துக்கு தயாரான பரபரப்பான சூழல் நிலவியது.

ஆனால், திருமண மண்டபத்தில் மணமக்கள் தீபக் மற்றும் நிஷா இடையே கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. அப்போது இருவரும் ஒருவருக்கொருவர் கடுமையான வார்த்தைகளால் பேசிக்கொண்டனர். இதனால் மனஉளைச்சல் அடைந்த தீபக் விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றார். தீபக் விஷம் குடிப்பதை நிஷாவின் சகோதரி மகன் பார்த்து மண்டபத்தில் இருக்கும் மற்றவர்களிடம் தெரிவித்தார்.

நிஷா

இதனால் பதறிய இரு குடும்பத்தினரும் உடனடியாக, தீபக்கை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டுச்சென்றனர். அவர் விஷம் குடித்ததை கேள்விப்பட்டதும் நிஷாவும் விஷம் குடித்துவிட்டார். பின்னர் அவரும் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார். இருவரும் வேறு வேறு மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்டு இருந்த நிலையில், தீபக் சிகிச்சை பலனளிக்காமல் உயிரிழந்தார். நிஷா தொடர்ந்து அவசர சிகிச்சை பிரிவில் ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

இதனிடையே, தற்கொலை தொடர்பாக போலீசார் விசாரணையில் பரபரப்பு தகவல்கள் வெளிவந்தன. திருமணநாளுக்கு இரண்டு நாள்களுக்கு முன்புதான் நிஷா, தீபக் மீது போலீசில் புகார் செய்திருந்தார். போலீசார் இரண்டு பேருக்கும் கவுன்சலிங் கொடுத்து அனுப்பி வைத்தனர் 

நிச்சயதார்த்தம் முடிந்தபிறகு தீபக் கடந்த சில மாதங்களுக்கு முன்பு வேறு ஒரு நகரத்திற்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டார். இதனால் அவர் திருமணத்தை தள்ளிப்போட்டுக்கொண்டே வந்தார். ஆனால் நிஷா தொடர்ந்து திருமணம் செய்ய நிர்ப்பந்தம் செய்து வந்தார்.

நிஷா

தீபக், இரண்டு ஆண்டுகளுக்கு திருமணத்தை தள்ளிப்போடும்படி கேட்டுக்கொண்டார். இதனால் அவர் வேலை செய்யும் இடத்திற்கு சென்ற நிஷா, இரண்டு நாள்கள் தீபக்குடன் தங்கி இருந்தார். அப்போதும் அவர்களுக்குள் கருத்து ஒற்றுமை ஏற்படவில்லை. இந்த நிலையில் திருமண மண்டபத்தில் இருவருக்கும் தகராறு ஏற்பட்டு இருவரும் விஷத்தை குடித்துவிட்டனர். திருமண மண்டபத்திலேயே மணமக்களுக்குள் சண்டை ஏற்பட்டு, மணமகன் உயிரிழந்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஒரே புடவைக்காக குடுமிபுடி சண்டைப்போட்ட இளம்பெண்! வைரலாகும் வீடியோ

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

அடிக்கிற வெய்யில்ல அடுப்பில்லாமலே ஆம்லெட் போடும் இளைஞர்... வைரல் வீடியோ!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

From around the web