விஜய்யுடன் குத்தாட்டம் போட்ட அஜித்.. வைரலாகும் டான்ஸ் வீடியோ!

 
அஜித்-விஜய்

தமிழ் சினிமாவில் ரஜினி கமலுக்கு பிறகு பல ஹீரோக்கள் வந்தாலும், அஜித்-விஜய் காம்போ அளவுக்கு யாரும் ரசிகர்களை கவர்ந்ததில்லை. 1995 ஆம் ஆண்டு வெளியான ராஜாவின் பார்வையிலே படத்தில் இருவரும் இணைந்து நடித்தனர். அப்போது இளம் நடிகர்களாக இருந்த அவர்கள் அடுத்த சில வருடங்களில் மாஸ் ஹீரோக்களாக வலம் வந்தனர்.


அதன்பிறகு இவர்களின் படங்களுக்கு இடையே கடும் போட்டி ஏற்பட்டு இருவருக்குமே லட்சக்கணக்கான ரசிகர்கள் கிடைத்தனர். தற்போது அஜித் படங்களில் கவனம் செலுத்தி அவருக்கு பிடித்த பொழுதுபோக்கில் கவனம் செலுத்தி வருகிறார். குறிப்பாக பைக்கில் உலகம் சுற்றுவதில் அவருக்கு ஆர்வம் அதிகம். இன்னொரு பக்கம் விஜய் அரசியல் கட்சி தொடங்கியுள்ளார்.

அவரது தமிழக வெற்றி கழகம் 2026 சட்டமன்ற தேர்தலில் போட்டியிட உள்ளது. இதற்கிடையில் இருவரும் இணைந்து ஒரு படத்தில் நடிக்கமாட்டார்களா என்ற எதிர்பார்ப்பு தமிழ் சினிமா ரசிகர்களிடையே நிலவி வருகிறது. தமிழில் சூப்பர் ஹிட்டான அரபிக் குத்து பாடலுக்கு விஜய்யுடன் அஜித் நடனமாடும் வீடியோவை ஏஐ தொழில்நுட்பத்தை பயன்படுத்தி ரசிகர்கள் உருவாக்கியுள்ளனர். அந்த வீடியோ சமூக வலைதளங்களில் கவனம் பெற்று வருகிறது.

விஜய் தற்போது வெங்கட் பிரபு இயக்கத்தில் த கோட் படத்தில் நடித்து வருகிறார். இதையடுத்து அவர் தனது கடைசி படத்தில் நடிக்கவுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. அஜித் தற்போது மகிழ் திருமேனி இயக்கத்தில் விடாமுயற்சி என்ற படத்தில் நடித்து வருகிறார். விஜய் நடித்துள்ள த கோட் திரைப்படம் செப்டம்பர் 5ஆம் தேதி திரைக்கு வரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இனி உச்சம்... பணமழை கொட்டப்போகும் ராசிகள்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

From around the web