” சுந்தரா டிராவல்ஸ்” பட நாயகி மீது போலீசில் புகார்... ரசிகர்கள் அதிர்ச்சி!

 
ராதா

 தமிழ் திரையுலகில்  ”சுந்தரா டிராவல்ஸ் ” படத்தின் மூலம் அறிமுகமாகி யதார்த்தமான நடிப்பான ரசிகர்களின் இதயம் கவர்ந்தவர் நடிகை ராதா. இவர் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு தொழிலதிபர் ஒருவரை திருமணம் செய்துகொண்டார். கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக அவரை பிரிந்து தனது மகன் மற்றும் தாயாருடன் வசித்து வந்தார். அதன்பிறகு  சப் இன்ஸ்பெக்டர் வசந்த ராஜாவை  2வது திருமணம் செய்து கொண்டார். வசந்த ராஜாவுக்கு ஏற்கனவே திருமணம் ஆகி  2  குழந்தைகள் உள்ளனர்.

ராதா


ஏப்ரல் மாதம் தனது 2வது கணவர் வசந்த ராஜா தன்னை சந்தேகப்பட்டு அடித்து துன்புறுத்தி வருவதாக விருகம்பாக்கம் போலீசில் நடிகை ராதா  புகார் அளித்தார். இது குறித்து வழக்கு பதிவு செய்து  வசந்தராஜாவிடம்  விசாரணை நடத்தப்பட்டதில்  நடிகை ராதா  தன்னை வற்புறுத்தி இரண்டாவதாக திருமணம் செய்து கொண்டதாக வசந்த ராஜா தெரிவித்தார். அத்துடன் ராதாவுக்கு  பல ஆண் நண்பர்களுடன் பழக்கம் உள்ளதாகவும் அதை கண்டித்ததால்  தன் மீது வீண்பழி சுமத்துவதாகவும் வசந்த ராஜா தெரிவித்தார்.  கணவர் தனது செயலுக்கு வருத்தம் தெரிவித்துக் கொண்டதால் புகாரை திரும்பப் பெற்றுக்கொள்வதாக ராதா கூறி வழக்கை வாபஸ் வாங்கிக் கொண்டார்.  

இனி உச்சம்... பணமழை கொட்டப்போகும் ராசிகள்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!


இந்நிலையில் பணம் கொடுக்கல், வாங்கல் பிரச்சினையில் முரளியை  தாக்கியதாக சென்னை, வடபழனி காவல் நிலையத்தில் நடிகை ராதா மீது மீண்டும் புகார் அளிக்கப்பட்டுள்ளது. இந்த தாக்குதலால்  தலையில் படுகாயம் அடைந்த முரளி, ராயப்பேட்டை மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார் . நடிகை ராதா மார்ச் மாதம், பிரான்சிஸ் என்பவரை தாக்கியதாக அவரது மகன் மீது புகார் அளிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.