ஜனவரியில் இறுதி வாக்காளர் பட்டியல்... தேர்தல் களத்திற்கு தயாராகும் அரசியல் கட்சிகள்... !!

 
தமிழக வாக்காளர் பட்டியலில் இந்தி மொழியில் அச்சான பெயர்கள்!! சமூக வலைத்தளங்களில் கடும் கண்டனம்!!

நாடாளுமன்ற தேர்தலுக்கு இன்னும் 5 மாதங்களே உள்ளது. இத்தகவல்  மக்களிடையே  இந்தியா முழுவதும் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. அரசியல் கட்சிகள் ஆட்சியை பிடிப்பது யார் என்ற ரீதியில்  தீவிரமாக காய் நகர்த்தி வருகின்றன.மிகப்பெரிய ஜனநாயக நாடான இந்தியாவில் மக்களவை தேர்தலை நடத்தி முடிக்கி தலைமை தேர்தல் ஆணையம் முழுவீச்சில் பணிகளை முடுக்கிவிட்டுள்ளது. அந்தவகையில் ஒவ்வொரு மாநிலத்திலும் வாக்குப்பதிவு எந்திரங்கள், வாக்காளர் பட்டியல் உள்ளிட்டவற்றை சரி பார்த்து ஆய்வு மேற்கொள்ள மாநில தலைமை அதிகாரிகளுக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

ஆதார் வாக்காளர் அட்டை


தமிழகத்தை பொறுத்த வரையில் வரைவு வாக்காளர் பட்டியல் ஏற்கனவே வெளியிடப்பட்டு, திருத்தங்கள் மேற்கொள்ள முகாம்களும் நடைபெற்று வருகின்றன. மேலும் தமிழகத்தில் வாக்குப்பதிவு எந்திரங்கள் சரிபார்ப்பு பணிகளும் சிறப்பாக நடந்து முடிந்துள்ளதாக தேர்தல் பணி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.இந்நிலையில் இந்திய தேர்தல் ஆணையம் ஒவ்வொரு மாநில தலைமை தேர்தல் அதிகாரிகளுடனான ஆலோசனைக் கூட்டத்தில் ஈடுபட்டு பல்வேறு உத்தரவுகளை பிறப்பித்துள்ளது. அந்த வகையில் தமிழகம், கர்நாடகா, ஆந்திரா, கேரளா உள்ளிட்ட மாநிலங்கள் மற்றும் புதுச்சேரி, அந்தமான் நிகோபர், லட்சத்தீவு ஆகிய யூனியன் பிரதேசங்களின் தலைமை தேர்தல் அதகாரிகளுடனான ஆலோசனைக் கூட்டம் நேற்று நவம்பர் 9ம் தேதி வியாழக்கிழமை நடைபெற்றது.

வரைவு வாக்காளர் பட்டியல்
இந்த ஆலோசனைக்  கூட்டத்திற்கு பின்னர் செய்தியாளர்களை சந்தித்த தமிழகத்தின் தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு பேசும்போது, ‘‘மக்களவை தேர்தல் தொடர்பாக நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் மக்களவை தேர்தலை நடத்துவது குறித்து ஆலோசிக்கப்பட்டது. மேலும் வருகிற ஜனவரி மாதத்தில் இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும் என்று தெரிவித்தார். மேலும் இந்த ஆண்டு புதிய வாக்காளர்கள் அதிகளவில் வந்துள்ளனர். தமிழகத்தை பொறுத்தவரையில் சட்டம் ஒழுங்கு சிறப்பாக உள்ளது’’ எனத் தெரிவித்தார்.

ஐப்பசி மாத புனித நீராடலின் மகத்துவம்.. மிஸ் பண்ணீடாதீங்க!!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

கிடுகிடுவென உடல் எடை குறைய தினம் இந்த பழம் சாப்பிட்டு பாருங்க...!!

ஐஸ்வர்யங்களை அள்ளித் தரும் ஐப்பசி மாத பண்டிகைகள், சிறப்புக்கள்!!

From around the web