கடன் செலுத்தாததால் வீட்டை பூட்டி சென்ற நிதி நிறுவனம்.. விரக்தியில் இளைஞர் எடுத்த விபரீத முடிவு!

 
முத்துக்காளை

சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே வடகரை பகுதியை சேர்ந்த கட்டிட தொழிலாளி சுப்பையா (55) என்பவர் வீடு கட்ட விரும்பினார். இவர் மதுரையில் உள்ள தனியார் நிதி நிறுவனத்தில் வீட்டுக்கான வீட்டு பத்திரத்தை அடமானம் வைத்து 2016ல் ரூ. 4 லட்சம் வாங்கியுள்ளார். கடந்த ஒன்றரை ஆண்டுகளாக சுப்பையா தவணை செலுத்தவில்லை. இதனால் தனியார் நிதி நிறுவன ஊழியர்கள் கடந்த 14ம் தேதி வீட்டில் இருந்தவர்களை வெளியேற்றிவிட்டு வீட்டை பூட்டிவிட்டு சென்றதாக கூறப்படுகிறது.

வீட்டு கடன்

இதுகுறித்து திருப்பூரில் உள்ள சுப்பையாவின் இளைய மகன் முத்துக்காளை (வயது 19) என்பவருக்கு உறவினர்கள் செல்போனில் தகவல் தெரிவித்தனர். இதையடுத்து, கடந்த 16ம் தேதி இரவு வந்த முத்துக்காளை, தனியார் நிதி நிறுவனத்தினர் சீல் வைத்த வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே சென்று கதவை பூட்டினார். பெற்றோர் மற்றும் உறவினர்கள் அவரை வெளியே வரும்படி கூறி கதவை தட்டினர்.

ஆனால், நீண்ட நேரமாகியும் முத்துக்காளை கதவை திறக்கவில்லை. மேலும், வீட்டின் உள்ளே இருந்து எந்த சத்தமும் கேட்கவில்லை. மறுநாள் காலை வரை முத்துக்காளை வீட்டை விட்டு வெளியே வரவில்லை. இதனால் சந்தேகமடைந்த அவரது குடும்பத்தினர் வீட்டின் கதவை உடைத்து உள்ளே சென்றனர். அப்போது வீட்டுக்குள் இருந்த மின் விசிறியில் முத்துக்காளை தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. அவர்கள் அதிர்ச்சியடைந்து கதறி அழுதனர்.

பள்ளி ஆசிரியரின் செக்ஸ் தொல்லை காரணமா?! கரூர் மாணவி தற்கொலை குறித்து தாய் பேட்டி!

இதுகுறித்து உடனடியாக சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அங்கு சென்று வாலிபர் முத்துகாளையின் உடலை கைப்பற்றி பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் குறித்து முத்துகாளையின் தாய் லட்சுமி கூறுகையில், ’வாங்கிய கடனை விட அதிகமாக திருப்பி செலுத்தியுள்ளோம். ஆனால் கடந்த ஒன்றரை ஆண்டுகளாக மாத தவணை செலுத்த முடியவில்லை. நிதி நிறுவன ஊழியர்களிடம் காலக்கெடு கேட்டு காலில் விழுந்தோம். ஆனால் அவர்கள் வீட்டை பூட்டி விட்டு சென்றனர். இதனால் மனமுடைந்த முத்துக்காளை வீட்டில் இருந்தபடியே உயிரை விட்டார்’ என்று கதறி அழுதார்.

மார்கழி மாத விரத முறைகள், வழிபாடு, பலன்கள்!

ஐயப்ப பக்தர்கள் தினசரி சொல்ல வேண்டிய ஸ்லோகம் இது தான்!

ஐயப்பன் பக்தர்கள் தெரிஞ்சிக்கோங்க ... சபரிமலை சுவாரஸ்யங்கள்!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

From around the web