குபுகுபுவென தீப்பற்றி எரிந்த கார்... நெடுஞ்சாலையில் பரபரப்பு!!

 
கார்

ஈரோடு மாவட்டம் சூரம்பட்டியில் வசித்து வருபவர் பாலாஜி. இவர்  பாத்திரக்கடை நடத்தி வருகிறார். இவர் திருச்சியில் உள்ள உறவினர் வீட்டிற்கு செல்வதற்காக தனது குடும்பத்தினரை காரில் அழைத்துச் சென்றார்.  அந்த கார் ஈரோடு ரயில் நிலையத்திற்கு அருகே வந்த போது   காரின் முன்பகுதியில் இருந்து புகை வெளியேறுவதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். உடனடியாக  அனைவரும் காரில் இருந்து கீழே இறங்கினர்.

தீவிபத்து


காரில் பற்றி எரிந்த  தீ மளமளவென பரவ தொடங்கியது. இதனை கண்ட ரயில்வே நிலைய ஊழியர்கள் மற்றும் பொதுமக்கள் அங்கிருந்த பாதுகாப்பு உபகரணங்களை எடுத்து தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.   தீயை கட்டுப்படுத்த முடியாமல் தீயணைப்புத்துறைக்கு தகவல் தெரிவித்தனர். விரைந்து வந்த தீயணைப்பு துறையினர் தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை கட்டுப்படுத்தினர்.

போலீஸ்

எனினும் காரின் முன்பகுதி முற்றிலுமாக எரிந்து சேதமடைந்தது. கார் தீப்பிடித்ததும் உடனடியாக காரில் இருந்தவர்கள் கீழே இறங்கியதால் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது. இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஐப்பசி மாத புனித நீராடலின் மகத்துவம்.. மிஸ் பண்ணீடாதீங்க!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

கிடுகிடுவென உடல் எடை குறைய தினம் இந்த பழம் சாப்பிட்டு பாருங்க!

ஐஸ்வர்யங்களை அள்ளித் தரும் ஐப்பசி மாத பண்டிகைகள், சிறப்புக்கள்!

From around the web