சாத்தூரில் வெடிவிபத்து... தரைமட்டமான கட்டிடம்... பலி எண்ணிக்கை 6 ஆக உயர்வு!

 
பட்டாசு விபத்து

விருதுநகர் மாவட்டத்தில் சாத்தூரில்  முறையான உரிமம் இன்றி பல பட்டாசு ஆலைகள் செயல்பட்டு வருகின்றன. இந்த ஆலைகளில் அடிக்கடி திடீர் விபத்துக்கள் ஏற்பட்டு பொதுமக்களிடையே பெரும் அச்சத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தி வருகிறது. அந்த வகையில் சாத்தூரில் அமைந்துள்ள பட்டாசு ஆலையில் திடீர் தீவிபத்து ஏற்பட்டது.

பட்டாசு விபத்து

இந்த  விபத்து நிகழ்ந்ததில் 6 பேர் பலியாகி இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.  விருதுநகர் மாவட்டம் சாத்தூரில் உள்ள அப்பைநாயக்கன்பட்டி பகுதியில் பட்டாசு ஆலை இயங்கி வருகிறது. இங்குள்ள 4 அறைகளில் பட்டாசு தயாரிக்கும் பணிகள் நடந்து வந்தன.

பட்டாசு விபத்து

இந்த  பட்டாசு ஆலையில் திடீரென வெடி விபத்து ஏற்பட்டதில் 4 அறைகளும் தரைமட்டமாகிவிட்டன. இச்சம்பவத்தில் இதுவரை 6 பேர் பலியாகிவிட்டனர். இடிபாடுகளில் வேறு யாரேனும் சிக்கியுள்ளனரா என்பது குறித்து மீட்பு படையினர் தேடி வருகின்றனர்.  

2025 புத்தாண்டு இந்த 6 நட்சத்திரத்தில் பிறந்தவங்களுக்கு தான் அதிர்ஷ்ட மழை!

மார்கழி மாத விரத முறைகள், வழிபாடு, பலன்கள்!

ஐயப்பன் பக்தர்கள் தெரிஞ்சிக்கோங்க ... சபரிமலை சுவாரஸ்யங்கள்!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

From around the web