துறைமுகத்தில் பயங்கர தீவிபத்து... 7 படகுகள் , 2 இருசக்கர வாகனங்கள் தீயில் கருகி நாசம்... !!

 
pataku

கர்நாடக மாநிலம் உடுப்பி அருகே உள்ள கங்கொலி துறைமுகத்தில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த தீவிபத்தில்  7 படகுகள், 2 இருசக்கர வாகனங்கள் எரிந்து சேதம் அடைந்துள்ளது. தீபாவளி நாளில்  ஏற்பட்ட இந்த  தீ விபத்து குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கரையில் படகுகளை நிறுத்தி பூஜை செய்து கொண்டிருந்த போது, ஒரு படகில் திடீரென தீப்பிடித்தது. இந்தத்  தீயானது மளமளவென அனைத்து படகுகளுக்கும் பரவி உள்ளது.


 உடுப்பி மாவட்டம் பைத்தூர் தாலுகாவில் கங்கொலி துறைமுகத்தில் ஏற்பட்ட திடீர் தீவிபத்தில் 11 மீன்பிடி படகுகளும், 2 இருசக்கர வாகனங்களும் முற்றிலும் தீக்கிரையானதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. படகுகள் முற்றிலும் எரிந்து நாசமானதால் தங்களது வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு இருப்பதாக மீனவர்கள் வேதனைதெரிவித்துள்ளனர். 

boat accident

 


தீபாவளி திருநாளை முன்னிட்டு படகுகளுக்கு பூஜை செய்து வழிபாடு நடத்திக் கொண்டிருந்தனர். அப்போது பட்டாசு வெடித்தனர். அந்த பட்டாசு படகில் விழுந்ததில் இந்த கோர விபத்து ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான காரணம் சேதம் குறித்த முழு தகவல்கள் இன்னும் வெளியாகவில்லை. இச்சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

ஐப்பசி மாத புனித நீராடலின் மகத்துவம்.. மிஸ் பண்ணீடாதீங்க!!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

கிடுகிடுவென உடல் எடை குறைய தினம் இந்த பழம் சாப்பிட்டு பாருங்க...!!

ஐஸ்வர்யங்களை அள்ளித் தரும் ஐப்பசி மாத பண்டிகைகள், சிறப்புக்கள்!!

From around the web