பிளாஸ்டிக் குடோனில் பயங்கர தீவிபத்து... !!

 
தீவிபத்து

திருவள்ளூர் மாவட்டம் செங்குன்றம் தீர்த்தங்கரையம்பட்டு ஊராட்சி  பாலவாயில் பகுதியில்  வசித்து வருவபவர் குமரவேல் . இவர் சென்னையைச் சேர்ந்தவர். இவருக்கு  சொந்தமான குடோன் ஒன்று இங்கு செயல்பட்டு வருகிறது.  இந்த குடோனில் மருந்து பொருட்கள் மற்றும் பிளாஸ்டிக் பொருட்கள் வைக்கப்பட்டு இருந்தன.

தீவிபத்து

இங்கிருந்து தான்  சென்னை முழுவதும் வினியோகம் செய்யப்பட்டு வந்தன. இந்த குடோனில் நேற்று மாலை திடீரென தீப்பிடித்தது.  இது குறித்து  தகவல் அறிந்ததும் செங்குன்றம், மாதவரம், அம்பத்தூர் ஆகிய தீயணைப்பு நிலையங்களில்வந்த தீயணைப்பு வீரர்கள் சுமார் ஒரு மணிநேரம் போராடி குடோனில் எரிந்த தீயை அணைத்தனர்.

தீவிபத்து

எனினும் தீ விபத்தில் குடோனில் இருந்த சுமார் ரூ.10 லட்சத்துக்கும் அதிகமான   பொருட்கள் தீயில் கருகி சேதமாகியுள்ளன.  இச்சம்பவம் குறித்து  போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி  வருகின்றனர்.  முதல் கட்ட விசாரணையில் மின்கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டு இருக்கலாம் எனத் தெரிகிறது.  
 

ஐப்பசி மாத புனித நீராடலின் மகத்துவம்.. மிஸ் பண்ணீடாதீங்க!!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

கிடுகிடுவென உடல் எடை குறைய தினம் இந்த பழம் சாப்பிட்டு பாருங்க...!!

ஐஸ்வர்யங்களை அள்ளித் தரும் ஐப்பசி மாத பண்டிகைகள், சிறப்புக்கள்!!

From around the web