மயிலாப்பூர் சாயிபாபா கோவிலில் தீவிபத்து... பற்றி எரிந்த கோபுரம்!!

தீபாவளி பண்டிகைக்கு மக்கள் புத்தாடை அணிந்து , பட்டாசு வெடித்து கொண்டாடினர். அசம்பாவிதங்கள் நிகழா வண்ணம் பட்டாசு வெடிக்க வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்பட்டு இருந்தது. இருப்பினும் ஆங்காங்கே சில துர்சம்பவங்கள் நிகழ்ந்து பெரும் சோகத்தையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளன. அந்த வகையில் சென்னையின் பிரதானப்பகுதியாக மயிலாப்பூரில் அமைந்துள்ளது
பிரசித்தி பெற்ற சாயிபாபா கோவில். இதனை சுற்றியுள்ள வெங்கடேச அக்ரஹாரத்திலும் பட்டாசு வெடித்து மக்கள் உற்சாகமாக தீபாவளியை கொண்டாடிக் கொண்டிருந்தனர். அதில் எதிர்பாராதவிதமாக ஒரு ராக்கெட் வெடி, கோவில் கோபுரத்தை சுற்றி வைக்கப்பட்டு இருந்த ஓலையில் பட்டது. இதனால் கோபுர ஓலையில் தீ மளமளவென பரவத் தொடங்கியது. சென்னை மயிலாப்பூர் சாய்பாபா கோவிலில் புதிதாக கோபுரம் புதுப்பிக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. இதனையடுத்து கோபுரத்தை சுற்றி ஓலை வைக்கப்பட்டு கோபுரம் தெரியாதபடி மறைக்கப்பட்டு இருந்தது.
இந்நிலையில், தீபாவளி பண்டிகையை ஒட்டி அப்பகுதி மக்கள் பட்டாசுகளை வெடித்து வரும் நிலையில் அதில் ஒரு ராக்கெட் வெடி, கோவில் கோபுரத்தை சுற்றி வைக்கப்பட்டு இருந்த ஓலையில் பட்டு தீப்பிடித்தது. இதைக் கவனித்த அப்பகுதி மக்கள் அதிர்ச்சி அடைந்தனர். உடனடியாக தீயணைப்பு துறைக்கு தகவல் அளிக்கப்பட்டது. தகவலின் பேரில் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு துறையினர் தீயைக் கட்டுப்படுத்தும் பணியில் ஈடுபட்டனர். அரைமணி நேரம் போராடி தீயணைப்பு துறையினர் தீயை அணைத்தனர். உடனடியாக செயல்பட்டதால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது.
ஐப்பசி மாத புனித நீராடலின் மகத்துவம்.. மிஸ் பண்ணீடாதீங்க!!
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
கிடுகிடுவென உடல் எடை குறைய தினம் இந்த பழம் சாப்பிட்டு பாருங்க...!!
ஐஸ்வர்யங்களை அள்ளித் தரும் ஐப்பசி மாத பண்டிகைகள், சிறப்புக்கள்!!