எலக்ட்ரிக் ஸ்கூட்டர் ஷோரூமில் தீ விபத்து... 28 ஸ்கூட்டர்கள் தீயில் கருகி நாசம்!
விருதுநகர் மாவட்டத்தில் என்ஜிஓ காலனி பகுதியில் அதே பகுதியில் வசித்து வருபவர் பாண்டியராஜன்.இவருக்கு சொந்தமான ஸ்ரீராம் எலக்ட்ரிகல்ஸ் என்ற கடையும் அதன் அருகே கார்த்திக் என்பவருக்குச் சொந்தமான ஹீரோ எலக்ட்ரிக் என்ற மின்சார பைக் ஷோரூமும் அடுத்தடுத்து செயல்பட்டு வருகிறது.நேற்றும் வழக்கம் போல் இங்கு ஷோரூமில் பணிபுரியும் நபர்கள் பணி முடித்துவிட்டு சென்ற நிலையில், நள்ளிரவு திடீரென அந்த ஷோரூமில் தீப்பிடித்து எரிந்துள்ளது .

இச்சம்பவம் குறித்து அருகில் இருந்தவர்கள் தீயணைப்பு துறைக்கும் கடை உரிமையாளருக்கும் தகவல் தெரிவித்தனர்.அதற்குள் அருகில் உள்ள ஸ்ரீராம் எலக்ட்ரிக்கல் கடைக்கும் தீ பரவி உள்ளது. அதற்குள் சம்பவ இடத்துக்கு வந்த தீயணைப்புத் துறையினர், நீண்ட நேரம் போராடி தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.

இந்த தீ விபத்தில் 19 புதிய எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களும், சர்வீஸ்க்கு வந்த 9 எலக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் என மொத்தம் 28 ஸ்கூட்டர்கள் எரிந்து கருகி சாம்பலாகின. தகவல் அறிந்ததும் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், இந்த விபத்து குறித்து வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மார்கழி மாத விரத முறைகள், வழிபாடு, பலன்கள்!
ஐயப்ப பக்தர்கள் தினசரி சொல்ல வேண்டிய ஸ்லோகம் இது தான்!
ஐயப்பன் பக்தர்கள் தெரிஞ்சிக்கோங்க ... சபரிமலை சுவாரஸ்யங்கள்!
