ஏகாம்பரநாதர் கோவிலில் தீப்பற்றி எரிந்த உண்டியல்... தீயில் கருகிய ரூபாய் நோட்டுக்கள்!

 
எரிந்த உண்டியல்

காஞ்சிபுரம் மாவட்டத்தில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற ஆலயம் ஏகாம்பரநாதர் கோவில் . இந்த கோவில்  உண்டியல் பணம் எரிந்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி  வருகின்றனர்.  பஞ்சபூத ஸ்தலங்களில் மண் ஸ்தலமாக  விளங்கும் ஏகாம்பரநாதர்  இக்கோயிலில் ராஜகோபுரம், மூலவர் அறை மற்றும் கோயில் பிரகாரங்கள் திருப்பணி பல கோடி ரூபாய் செலவில் நடந்து வருகிறது. இந்நிலையில் கோயில் நிர்வாகம் சார்பில், இந்து சமய அறநிலை துறை அதிகாரிகள் கோயில் நுழைவு வாயில் முன்பு திருப்பணிக்காக உண்டியல் வைத்துள்ளனர். நேற்று  மாலை 6 மணிக்கு  உண்டியலில் திடீரென கரும்புகை வந்தது.

எரிந்த உண்டியல்

அதிர்ச்சியடைந்த பக்தர்கள், உடனடியாக இந்து சமய அறநிலைய துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர்.  சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து உண்டியலை திறந்து பார்த்தனர். அதற்குள் ஒரு தீக்குச்சி கிடந்தது. உண்டியலில் இருந்த பணத்தை வெளியே எடுத்து எண்ணி பார்த்தனர். ரூ2000  மதிப்பிலான 10, 20, 50, 100 ரூபாய் நோட்டுகள் தீயில் கருகி கிடந்தது. உடனடியாக உண்டியலை திறந்து அகற்றியதால் ரூ.99 ஆயிரத்து 918 ரூபாய் நோட்டுகள் தப்பியது.

எரிந்த உண்டியல்

இது குறித்து இந்து சமய அறநிலையத்துறை சார்பில்  போலீசார் வழக்குப்பதிவு செய்து, அங்கு பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி கேமரா பதிவுகளை ஆய்வு செய்து வருகிறன்றனர். உண்டியலில் மர்ம நபர்கள் தீக்குச்சியை கொளுத்தி போட்டார்களா அல்லது வேறு ஏதாவது காரணமா என போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்

பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!

நாப்கின்களால் ஏற்படும் ரேசஸ் மற்றும் எரிச்சலை போக்க இயற்கை வழிகள்!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது