பட்டாசு கடையில் பயங்கர தீ விபத்து... அடுத்தடுத்து 5 கடைகள் தீயில் எரிந்து நாசம்!
ராஜேந்திர நகர் பகுதியில் உள்ள பட்டாசு கடையில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்து; 4 கடைகள் தீயில் எரிந்து சாம்பல்
தெலுங்கானா மாநிலம், ரங்காரெட்டி மாவட்டம், ராஜேந்திரா நகரில் உள்ள சன்சிட்டி பகுதியில் தனியாருக்கு சொந்தமான பட்டாசு விற்பனை கடை உள்ளது.
தற்போது தீபாவளி நேரம் என்பதால் பட்டாசு விற்பனை விறுவிறுப்பாக நடந்து வந்தது. நேற்று இரவு விற்பனை முடிந்து ஊழியர்கள் பட்டாக கடையை மூடிவிட்டு சென்றனர். இந்நிலையில் நள்ளிரவில் மின்கசிவு காரணமாக பட்டாசு கடையில் இருந்த பட்டாசுகள் பயங்கர சத்தத்துடன் வெடித்து சிதறி அருகில் உள்ள குடோனுக்கு பரவியது. பின்னர் அதன் அருகில் இருந்த ஒட்டலுக்கு தீ பரவியதால் அங்கிருந்த சிலிண்டர்கள் பயங்கர சத்தத்துடன் வெடித்தன.
VIDEO | Fire breaks out at a crackers shop near Sun City, Rajendra Nagar in #Hyderabad, Telangana. Fire brigade at the spot. More details are awaited. pic.twitter.com/1qrnqMe2kv
— Press Trust of India (@PTI_News) November 11, 2023
இதனால் பட்டாசு கடைக்கு அருகில் உள்ள அடுக்குமாடி குடியிருப்புவாசிகள் நள்ளிரவில் வெடிகுண்டு வெடித்ததாக பிதி அடைந்து அலறி அடித்துக் கொண்டு விட்டை விட்டு வெளியே ஒடினர். தியணைப்பு துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து தீயை அணைக்க போராடினர். தி மேலும் மளமளவென பரவி அருகில் இருந்த மேலும் 4 கடைகள் எரிந்து நாசமானது. கூடுதலாக தியணைப்பு வாகணங்கள் வரவழைக்கப்பட்டு கடைகளின் சுவர்களை உடைத்து நீண்ட நேர
போராட்டத்திற்கு பிறகு தியை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.
நள்ளிரவில் தீ விபத்து ஏற்பட்டதால் உயிர் சேதம் எதுவும் ஏற்படவில்லை. இதுகுறித்து ராஜேந்திரா நகர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஐப்பசி மாத புனித நீராடலின் மகத்துவம்.. மிஸ் பண்ணீடாதீங்க!
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
கிடுகிடுவென உடல் எடை குறைய தினம் இந்த பழம் சாப்பிட்டு பாருங்க!
ஐஸ்வர்யங்களை அள்ளித் தரும் ஐப்பசி மாத பண்டிகைகள், சிறப்புக்கள்!