மதுரை : விமான நிலைய வளாகத்தில் திடீர் தீ விபத்து!

 
மதுரை விமான நிலையம்

மதுரை விமான நிலைய வளாகத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் ஏசி உள்ளிட்ட பொருட்கள் சேதமடைந்தன

மதுரை விமான நிலைய வளாகத்தில் விமானப் போக்குவரத்தை கண்காணிக்கும் விதமாக புதிதாக கண்காணிப்புக் கோபுரம் ஒன்று அமைக்கப்படுகிறது. இதற்கான கட்டுமானப் பணிகள் தற்போது நடைபெற்று வரும் நிலையில், கீழ்தளப் பகுதியில் ஏசி இயந்திரம் பொருத்துதல் உள்ளிட்ட பணிகள் நடைபெற்று வந்தன. அப்போது, அந்தப் பகுதியில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது.

இது மின்கசிவால் ஏற்பட்டிக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. தீ விபத்தால் ஏசி இயந்திரங்கள், கட்டுமானப் பொருட்கள், மின்சார உபகரணங்கள் உள்ளிட்டவை தீயில் எரிந்து சேதமடைந்தன.

மதுரை மக்களுக்கு மகிழ்ச்சையான செய்தி!.. மதுரையிலிருந்து சார்ஜாவிற்கு நேரடியாக பயணிகள் விமான சேவை

இது குறித்து விமான நிலைய அதிகாரிகள் தரப்பில் கேட்டபோது, “பணியில் ஈடுபட்டவர்கள் சிகரெட் பிடித்திருக்கிறார்கள். அதனால் தீ விபத்து ஏற்பட்டிருக்கும் எனத் தெரிகிறது.

ஜனவரி 8 முதல் மதுரை – சார்ஜா விமான சேவை தொடக்கம்!

இருப்பினும் தீ விபத்துக்கான காரணம் குறித்து விசாரிக்கப் படுகிறது. இந்த தீ விபத்தால் யாருக்கும் காயமோ உயிரிழப்போ ஏற்படவில்லை. புதிதாக வாங்கப்பட்ட ஏசி இயந்திரம் உள்ளிட்ட சில பொருட்கள் மட்டும் தீயில் எரிந்து சேதமடைந்தன” என்றனர்.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!

From around the web