நைஜீரியா வணிக டவரில் திடீர் தீ விபத்து... 10 பேர் உடல் கருகி சாவு!
ஆப்பிரிக்காவில் நைஜீரியாவின் வணிக தலைநகரம் லாகோஸ். அங்கு ஆப்ரிலேண்ட் டவர் என்ற வணிக வளாகம் அமைந்துள்ளது. இந்நிலையில் வணிக வளாகத்தின் 4-வது மாடியில் திடீரென தீப்பற்றிக்கொண்டு எறிந்தது. மளமளவென கட்டிடத்தின் மற்ற பகுதிகளுக்கும் வேகமாக பரவியது. இதனால் அந்த இடம் முழுவதும் கரும்புகை மண்டலமாக காட்சி அளித்தன.

இதனையடுத்து அங்கிருந்தவர்களுக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டது. வணிக வளாகத்தின் கண்ணாடி உடைத்து பலரும் தப்பிக்க முயலவும் கை, கால்கள் முறிந்தன.
இதற்கிடையே தகவல் அறிந்த தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து பல மணி நேரம் பிறகு தீ கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது. வணிக வளாகத்தில் சிக்கியவர்களை மீட்கும் பணியும் துரிதப்படுத்தப்பட்டது. இந்த தீ விபத்தில் 10 பேர் உடல் கருகி பலியாகினர். மேலும் 25 பேருக்கு படுகாயம் ஏற்பட்டது. மீட்பு படையினர் அவர்களை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். இந்த விபத்தில் பலியானோருக்கு அதிபர் போலா டினுபு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளார்.
இதனையடுத்து தீ விபத்துக்கான காரணம் குறித்து அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். முதற்கட்ட விசாரணையில், இன்வெர்ட்டர் பேட்டரி வைத்திருந்த அறையில் மோசமான பராமரிப்பு மற்றும் போதிய காற்றோட்டம் இல்லாததே இதற்கு காரணம் என தெரிய வந்துள்ளது.
இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்
பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!
நாப்கின்களால் ஏற்படும் ரேசஸ் மற்றும் எரிச்சலை போக்க இயற்கை வழிகள்!!
