கண்டெய்னர் லாரியில் பயங்கர தீ விபத்து.. எரிந்து நாசமான 40 இருசக்கர வாகனங்கள்!

 
கெலமங்கலம்

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அடுத்த கெலமங்கலம் அருகே ஓசூர் நோக்கி வந்து கொண்டிருந்த கன்டெய்னர் லாரிக்குள் தீப்பிடித்து அதில் இருந்த 40க்கும் மேற்பட்ட இருசக்கர வாகனங்கள் தீப்பிடித்து எரிந்தன. தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

உத்தனப்பள்ளி பகுதியில் உள்ள குடோனில் இருந்து மகாராஷ்டிரா மாநில பதிவு எண் கொண்ட கண்டெய்னர் லாரியில் டி.வி.எஸ்., நிறுவனத்துக்கு சொந்தமான 40 இருசக்கர வாகனங்களை ஏற்றி ஓசூருக்கு கொண்டு சென்றபோது, போடிச்சிப்பள்ளியில், மின் கம்பியை உரசி லாரி தீப்பிடித்ததை கண்டுகொள்ளாமல் இருந்த லாரி டிரைவர், தீ மளமளவென பரவியதையடுத்து, 5 கி.மீ., தொலைவில் நிறுத்தியதாக கூறப்படுகிறது.

தீயணைப்பு வீரர்கள் தீயை அணைத்து வருகின்றனர். கண்டெய்னர் லாரி சாலையோரம் நிறுத்தப்பட்டதால் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படவில்லை. 40 வாகனங்கள் எரிக்கப்பட்டதால் கெலமங்கலம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!

From around the web