ஃபர்னிச்சர் கடையில் பயங்கர தீ விபத்து... பல லட்சம் தேக்கு மரங்கள் எரிந்து நாசம்!
திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி பெருமாள்பேட்டை பகுதியில் கணவாய் புதூர் பகுதியில் வசித்து வருபவர் சம்பத். இவர் மரச்சாமான்கள் மற்றும் ஃபர்னிச்சர் செய்யும் கடை நடத்தி வருகிறார்.இந்நிலையில், இன்று அதிகாலை கடையில் திடீரென ஏற்பட்ட தீ விபத்தில் பல லட்சம் ரூபாய் மதிப்பிலான தேக்கு மரங்கள், இயந்திரங்கள் எரிந்து நாசமானதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

இது குறித்து வெளியான செய்திக்குறிப்பில் வாணியம்பாடி மற்றும் ஆம்பூர் ஆகிய பகுதிகளில் இருந்து தீயணைப்புத் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர்.

இருப்பினும் மரக்கடையில் வைக்கப்பட்டிருந்த ஃபர்னிச்சர் பொருள்கள், சோபாக்கள், தேக்கு மரங்கள், மரச்சாமான்கள் செய்யும் இயந்திரங்கள், மர அறுவை இயந்திரங்கள் உட்பட சுமார் ரூ. 50 லட்சம் மதிப்பிலான பொருள்கள் முற்றிலும் தீயில் எரிந்து நாசமாகின. சம்பத் தற்போது புதிதாக இப்பகுதியில் கடையை திறந்து 15 நாள்களே ஆன நிலைலும் மின் இணைப்பு கூட கொடுக்கவில்லை. இந்நிலையிலும் ஏற்பட்டுள்ள தீ விபத்திற்கு வேறு ஏதேனும் மர்ம நபர்கள் நாசவேலை காரணமா அல்லது வேறு ஏதேனும் காரணமா என்பது குறித்து தீயணைப்புத் துறையினர் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்
பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!
நாப்கின்களால் ஏற்படும் ரேசஸ் மற்றும் எரிச்சலை போக்க இயற்கை வழிகள்!!
