பிளாஸ்டிக் குடோனில் பயங்கர தீ விபத்து... ரூ3 லட்சம் மதிப்புள்ள பொருட்கள் எரிந்து நாசம்!

 
விஜயவாடா தீ விபத்து
பிளாஸ்டிக் குடோனில் நேற்று ஏற்பட்ட தீ விபத்தில் லட்சக்கணக்கில் மதிப்புள்ள பொருட்கள் எரிந்து நாசமானது. போலீசார் இது குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். திருப்பத்தூர் மாவட்டம் கோணாமேடு பகுதியில் தனியாருக்கு சொந்தமான பிளாஸ்டிக் குடோன் மற்றும் மர பர்னிச்சர் தயாரிக்கும் தொழிற்சாலை செயல்பட்டு வருகிறது. 2 ஆலைகளும் அடுத்தடுத்து  அமைந்துள்ளன. இந்நிலையில் நேற்று பிற்பகலில் பிளாஸ்டிக் குடோனில் திடீரென தீப்பற்றி எரியத் தொடங்கியது.  உடனே தீ மளமளவென பரவி இதன் அருகில் உள்ள மர பர்னிச்சர் தொழிற்சாலைக்கும் பரவியது.  

தூத்துக்குடி தீயணைப்பு துறையினர்

உடனடியாக அந்த பகுதி முழுவதும் கரும்புகை சூழ்ந்துள்ளது.  தீயணைப்புத்துறைக்கு அளிக்கப்பட்ட தகவலின் பேரில் விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள்   தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். இன்று விடுமுறை நாள் என்பதால், தொழிலாளர்கள் யாரும் இல்லை. இதனால் பெரும் உயிர்ச்சேதம்  தவிர்க்கப்பட்டுள்ளது. மரப்பர்னிச்சர் தொழிற்சாலையில் சுமார் ரூ3 லட்சம் மதிப்பிலான பர்னிச்சர்கள் எரிந்து சாம்பலாகின.  

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

இனி உச்சம்... பணமழை கொட்டப்போகும் ராசிகள்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!

From around the web