நட்சத்திர ஹோட்டலில் தீ விபத்து... கிராண்ட் மாஸ்டர்ஸ் செஸ் போட்டி நாளை ஒத்திவைப்பு!

 
தீ விபத்து

இன்று சென்னை தேனாம்பேட்டையில் உள்ள பிரபல தனியார் நட்சத்திர விடுதியில் குவாண்ட்பாக்ஸ் சென்னை கிராண்ட் மாஸ்டர்ஸ் 2025 போட்டி தொடங்கப்படும் என அறிவிக்கப்பட்டு இருந்தது. இன்று முதல் ஆகஸ்ட் 15ம் தேதி போட்டி   நடைபெற இருந்த நிலையில்,  அந்த விடுதியின் 9வது தளத்தில் நேற்று நள்ளிரவு திடீரென  மின்கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டதாக தெரிகிறது.  
 கிராண்ட் மாஸ்டா்ஸ் செஸ்
இதனையடுத்து விடுதியில் இருந்த  அனைத்து வீரர்களும் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டுள்ளனர். இவர்கள் அனைவரும்  அதே பகுதியில் உள்ள மற்றொரு நட்சத்திர விடுதியில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். அத்துடன் திடீர் தீ விபத்து காரணமாக இன்று நடைபெற இருந்த அனைத்து போட்டிகளும் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

சதுரங்கம் முதலீடு செஸ்

இன்றைய தினம் நடைபெற இருந்த போட்டிகள், நாளைக்கு ஒத்திவைக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன்  போட்டிக்கு இடையே ஆகஸ்ட் 11ம் தேதி ஓய்வு நாளாக அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், அன்றைய தினமும் போட்டிகள் நடத்தப்பட்டு வழக்கம் போல் ஆகஸ்ட் 15ம் தேதி நிறைவு பெறும் எனக் கூறப்படுகிறது

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்

பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!

நாப்கின்களால் ஏற்படும் ரேசஸ் மற்றும் எரிச்சலை போக்க இயற்கை வழிகள்!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?