டிராக்டர் மீது தீயணைப்பு வாகனம் மோதி விபத்து... 6 பேர் காயம்!

 
டிராக்டர் விபத்து தீயணைப்பு

சேலம் மாவட்டம், தம்மம்பட்டி உடையார்பாளையம் பகுதியில் மலைப்பாம்பு இருப்பதாக தகவல் கிடைத்தது. இந்த தகவலின் பெயரில், கெங்கவல்லி தீயணைப்புத் துறை நிலைய அலுவலா் வெங்கடேசன், பணியாளா்கள் பாலகிருஷ்ணன், சதீஷ்குமாா், ரமேஷ், வசந்த் இவர்களுடன்  தீயணைப்பு வாகனம் சென்று கொண்டிருந்தது.  

இந்த தீயணைப்பு வாகனத்தை சுபாஷ் சந்திரபோஸ் இயக்கியுள்ளார். அப்போது கூடமலை பகுதியில் வாகனம் சென்றுகொண்டிருந்த போது அதே திசையில் நடுவலூரை சேர்ந்த செங்குட்டுவேல்  தம்மம்பட்டி கொக்கான்காட்டை பகுதிக்கு ஜல்லிசிப்சம் லோடு ஏற்றிக்கொண்டு டிராக்டரில் சென்று கொண்டிருந்தார்.

விபத்து

அப்போது முன்னாள் சென்று கொண்டிருந்த டிராக்டரை தீயணைப்பு வாகனம் முந்தி செல்ல முயற்சித்த போது திடீரென டிராக்டர் மீது மோதியது. இதில் டிராக்டர் கவிழ்ந்து கோர விபத்து ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து வயல்வெளிக்குள் புகுந்த தீயணைப்பு வாகனம் மின் கம்பத்தின் மீது மோதி நின்று விட்டது. டிராக்டர் மற்றும் தீயணைப்பு வாகனம் நசுங்கி சேதமடைந்தது.

விபத்து

இதில் தீயணைப்பு வகானத்தில் சென்ற டிராக்டர் வெங்கடேசன், பாலகிருஷ்ணன் ஆகியோருக்கு காலில் காயம் ஏற்பட்டது. டிராக்டா் ஓட்டுநா் உட்பட மற்ற 6 பேரும் அதிர்ஷ்டவசமாக காயங்களுடன் உயிர்தப்பினர். காயமடைந்த அனைவரும் ஆத்தூா் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனா். இச்சம்பவம் குறித்து போலீசார்  வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி  வருகின்றனா்.

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்

பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!

நாப்கின்களால் ஏற்படும் ரேசஸ் மற்றும் எரிச்சலை போக்க இயற்கை வழிகள்!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?