மேல்மருவத்தூரில் 1008 கஞ்சி கலயம், தீச்சட்டி ஊர்வலம்!
மேல்மருவத்தூர் ஆன்மிக குரு அருள்திரு பங்காரு அம்மா அவர்களின் அருளாசியுடன் கோவில்பட்டி மந்திதோப்பு ரோட்டில் உள்ள ஆதிபராசக்தி வழிபாட்டு மன்றத்தில் ஆடிப்பூர விழா நடைபெற்றது. அதிகாலையில் அன்னை ஆதிபராசக்திக்கு சிறப்பு வழிபாடு நடைபெற்றது. இதில் மகளிர் 108, 1008 தமிழ் மந்திரங்கள் கூறி குங்கும அர்ச்சனை செய்து வழிபட்டனர். மகளிர் அணி ஒருங்கிணைப்பாளர் பத்மாவதி தொடங்கிவைத்தார்.

தொடர்ந்து உலகம் சமாதானம் வேண்டியும், மழைவளம் வேண்டியும், விவசாயம் வளம்பெறவும், வைரஸ் தொற்றுநோய் நோய் நீங்கி, அனைத்து மக்களும் நலமுடன் வாழவும் அன்னையிடம் வேண்டி மாபெரும் 1008 கஞ்சிக்கலயம், 26 அக்கினிசட்டி, 56 முளைப்பாலிகை ஏந்தி ஆன்மிக ஊர்வலம் நடைபெற்றது. ஆன்மிக இயக்க மாவட்ட தலைமை ஒருங்கிணைப்பாளர் சக்தி முருகன் ஆன்மிக ஊர்வலத்தை தொடங்கிவைத்தார்.

ஊர்வலம் மந்தித்தோப்பு ரோடு, மாதாங்கோவில் தெரு, தெற்கு பஜார், செண்பகவல்லி அம்மன் கோவில் வழியாக மன்றம் வந்தடைந்தது. பக்தர்கள் அம்மனுக்கு கஞ்சி வார்த்தல் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.இதனையடுத்து அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சியை மன்ற தலைவர் அப்பாசாமி தொடங்கிவைத்தார்.
இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்
பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!
நாப்கின்களால் ஏற்படும் ரேசஸ் மற்றும் எரிச்சலை போக்க இயற்கை வழிகள்!!
