பயங்கரவாதிகள் மீது துப்பாக்கி சூடு... ஒருவர் பலி, 3 ராணுவ வீரர்கள் படுகாயம்.!

 
பயங்கரவாதிகள்


 
ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில்   குல்காம் மாவட்டத்தில் இன்று காலை பாதுகாப்புப் படையினருக்கும் பயங்கரவாதிகளுக்கும் இடையே கடும் மோதல் ஏற்பட்டது. இந்த  மோதலில் ஒரு ராணுவ வீரர் படுகாயம் அடைந்தார்.  இதில் ஒரு தீவிரவாதி சுட்டுக்கொல்லப்பட்டார்.  மேலும் ஒரு இந்திய ராணுவ ஜூனியர் கமிஷன்ட் அதிகாரி  படுகாயம் அடைந்தார்.

பயங்கரவாதிகள்
குல்காம் மாவட்டத்தின் குட்டார் காட்டுப் பகுதியில், ஜம்மு-காஷ்மீர் போலீஸின் உளவு தகவல்களின் அடிப்படையில் இந்திய ராணுவம், ஜம்மு-காஷ்மீர் போலீஸ் மற்றும் மத்திய ரிசர்வ் போலீஸ் படை இணைந்து தேடுதல் வேட்டையைத் தொடங்கியுள்ளனர். தீவிரவாதிகளின் இருப்பை உணர்ந்ததும், அவர்கள் துப்பாக்கிச் சூடு நடத்தியதால் சண்டை தொடங்கியது.

பயங்கரவாதிகள்

இதில் மேலும் ஒரு தீவிரவாதி நசீர் அகமது என்று அடையாளம் காணப்பட்டவர் சுட்டுக்கொல்லப்பட்டார். இது குறித்து நடத்தப்பட்ட விசாரணையில்  இவர் பாகிஸ்தான் ஆதரவு தீவிரவாதி எனத் தெரிகிறது.  மேலும், ஜூனியர் கமிஷன்ட் அதிகாரி கடுமையான காயமடைந்து, அருகிலுள்ள மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.  அவரது நிலை கவலைக்கிடமாக இருப்பதாகத்  தெரிவிக்கப்பட்டுள்ளது. மொத்தம் 3 ராணுவ வீரர்கள் காயமடைந்ததாக சமூக வலைதளங்களில் செய்திகள் வெளியாகி வருகின்றன.

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்

பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!

நாப்கின்களால் ஏற்படும் ரேசஸ் மற்றும் எரிச்சலை போக்க இயற்கை வழிகள்!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?