ஆம்ஸ்ட்ராங் முதலாம் ஆண்டு நினைவு நாள்... முழு உருவ சிலை திறப்பு.!

பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங். 2024, ஜூலை 25ம் தேதி படுகொலை செய்யப்பட்டார். இந்த சம்பவம் குறித்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து இதுவரை 25-க்கும் மேற்பட்டோரை கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். விசாரணை இன்னும் நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், ஆம்ஸ்ட்ராங்கின் முதலாம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு, இன்று சென்னையில் நினைவேந்தல் மற்றும் சங்கமம் நடைபெற்றது. திருவள்ளூர் மாவட்டம், பொத்தூரில் உள்ள அவரது நினைவிடத்தில் ஆம்ஸ்ட்ராங்கின் சிலை திறக்கப்பட்டுள்ளது. அப்போது பௌத்த மதச் சடங்குகள் பின்பற்றப்பட்டன.
முதலில் அவரது நினைவு இடத்தில், அவரது முழு திருவுருவ சிலைக்கு காவல் துறை அனுமதி வழங்க மறுத்திருந்தது. இதனையடுத்து சென்னை உயர்நீதிமன்றத்தில் ஆம்ஸ்ட்ராங் மனைவி பொற்கொடி அனுமதி கேட்டு வழக்கு தொடர்ந்திருந்தார். அப்பொழுது, ஆம்ஸ்ட்ராங் சிலை நிறுவ தமிழ்நாடு அரசு அனுமதி அளிப்பதாக தகவல் தெரிவித்திருந்தது.
இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்
பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!
நாப்கின்களால் ஏற்படும் ரேசஸ் மற்றும் எரிச்சலை போக்க இயற்கை வழிகள்!!