ஆகஸ்ட் 15ல் நெல்லையில் முதல் பாஜக மாநாடு.. களை கட்டும் தேர்தல் திருவிழா!

 
பாஜக  மாநாடு

தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் 2026ல் நடைபெற உள்ள நிலையில் ஆளும் தி.மு.க. தலைமையிலான கூட்டணி ஒருபுறம் தேர்தலுக்கான பணிகளில் ஈடுபட்டு வருகிறது. தி.மு.க. கூட்டணியில் காங்கிரஸ், ம.தி.மு.க. விடுதலை சிறுத்தைகள், கம்யூனிஸ்டு உள்ளிட்ட கட்சிகள் உள்ளன. இந்த கூட்டணி 2017 முதல் நீடித்து வருகிறது. அ.தி.மு.க.வுடன் கூட்டணி அமைத்து பா.ஜ.க. தேர்தலை சந்திக்க தயாராகி வருகிறது. நாம் தமிழர் கட்சியும் களத்தில் உள்ளது. நடிகர் விஜய் தலைமையிலான த.வெ.க.வும் தேர்தலில் போட்டியிடுகிறது. இதனால், 4 முனை போட்டி நிலவுவது உறுதியாகி இருக்கிறது.

4 மாநில சட்டமன்ற தேர்தல் பொறுப்பாளர்களை நியமித்தது பாஜக

இந்நிலையில், சென்னை காட்டாங்குளத்தூரில் பா.ஜ.க.வின் பூத் கமிட்டி தொடர்பான கூட்டம் இன்று நடந்தது. இதில், அக்கட்சியின் முன்னாள் தலைவர்கள், முக்கிய நிர்வாகிகள், பிரமுகர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இதில் பல முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டன. அப்போது, அடுத்த ஆண்டு நடைபெற உள்ள சட்டசபை தேர்தலை முன்னிட்டு மேற்கொள்ள வேண்டிய கட்சி பணிகள் பற்றி ஆலோசிக்கப்பட்டது. இதில், பா.ஜ.க.வின் முதல் மாநாடு நடைபெறும் இடம் பற்றிய அறிவிப்பு வெளியிடப்பட்டது. இதன்படி, தமிழக சட்டசபை தேர்தலையொட்டி ஆகஸ்டு 15-ந்தேதி நெல்லையில் பா.ஜ.க.வின் முதல் மாநாடு நடைபெறும் என அக்கட்சி அறிவித்துள்ளது.

தமிழக பாஜக

ஜி.கே.வாசன் இந்த கூட்டத்தில், அ.தி.மு.க.வுக்கு நாம் சுமை அல்ல. கூட்டணியில் நாம் இடம் பெற்றிருப்பது அ.தி.மு.க.வுக்கு பலம் சேர்க்கும் என காட்ட வேண்டும் என நிர்வாகிகளுக்கு அக்கட்சியின் தலைமை அறிவுறுத்தி உள்ளது. அதனை நிரூபிக்கும் வகையில் நாம் செயலாற்ற வேண்டும் எனக் கூறியுள்ளது. நடிகர் விஜய்யின் அரசியல் வருகை, நாம் தமிழர் கட்சியின் வாக்கு வங்கி ஆகியவை நமக்கான சவாலாக உள்ளன. இதேபோன்று தி.மு.க. ஆட்சிக்கு எதிரான மனநிலை, ஆபரேஷன் சிந்தூர், அ.தி.மு.க. கூட்டணி ஆகியவை சாதகங்களாக உள்ள விசயங்களாக பார்க்கப்படுவதாக கூறியுள்ளார்.

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்

பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!

நாப்கின்களால் ஏற்படும் ரேசஸ் மற்றும் எரிச்சலை போக்க இயற்கை வழிகள்!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?