கேன்ஸ் விழாவில் இந்திய குறும்படத்துக்கு முதல் பரிசு... திரையிடப்பட்ட இந்தியப் படங்களின் முழுபட்டியல்!
பிரான்ஸ் நாட்டின் கேன்ஸ் நகரில் ஆண்டுதோறும் திரைப்பட விழா நடைபெற்று வருகிறது. இதில் உலகம் முழுவதுமிருந்து திரை நட்சத்திரங்கள் வித்தியாசமான உடைகளில் வலம் வரும் ரெட்கார்ப்பெட் நிகழ்ச்சி ரசிகர்கள் மத்தியில் கவனம் ஈர்க்கும். இதில் சிறந்த கதைக்களம் கொண்ட திரைப்படங்களும் பல்வேறு பிரிவுகளில் போட்டியிடத் தேர்ந்தெடுக்கப்பட்டு திரையிடப்படும். அப்படி இந்த வருடம் கேன்ஸ் திரைப்பட விழாவில் திரையிடப்பட்ட இந்திய திரைப்படங்கள் பட்டியலை இங்குப் பார்க்கலாம். கேரளாவிலிருந்து மும்பை நர்ஸிங் ஹோமிற்குச் செல்லும் இரண்டு செவிலியர்களை மையப்படுத்தியதுதான் இந்தத் திரைப்படத்தின் கதை. இதனை இயக்குநர் பாயல் கபாடியா இயக்கி இருக்கிறார். மலையாளத்தில் 1994-ல் வெளியான ‘ஸ்வகம்’ என்ற மலையாளத் திரைப்படம் கேன்ஸ் திரைப்பட விழாவில் தேர்வானது.

அந்தப் படத்திற்குப் பிறகு 30 ஆண்டுகளுக்குப் பிறகு இயக்குநர் பாயல் கபாடியாவின் இந்தத் திரைப்படம் 'Palme de' Or' என்ற விருது விழாவில் திரையிடப்பட தேர்வாகி இருக்கிறது. சந்தியா சூரி இயக்கத்தில் உருவான இந்தப் படம் பெண் காவலரின் வாழ்க்கையை மையப்படுத்தி உருவாகி இருக்கிறது. கணவர் இறந்த பிறகு வாரிசு அடிப்படையில் கணவரின் பணியை வாரிசாகப் பெற்ற பெண்ணின் கதை இது. திரைப்படம் பெண்களுக்கு அதிகாரமளிக்கும் அதேவேளையில் அந்தப் பெண்ணின் மற்றொரு இருண்ட பக்கத்தையும் காட்டுகிறது.
இயக்குநர் சித்தானந்த் எஸ் நாயக் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ‘சன்ஃபிளவர்ஸ்’. புனேவைச் சேர்ந்த பிலிம் அண்ட் டெலிவிஷன் இன்ஸ்டிடியூட் ஆப் இந்தியா (FTII) மாணவர்களின் தயாரிப்பில் உருவான படம் இது. திருடப்பட்ட சேவலை மையமாகக் கொண்டு இந்தக் கதை நகர்கிறது. இந்த குறும்படம் முதல் பரிசைத் தட்சி சென்றது.
77-வது கேன்ஸ் திரைப்பட விழாவின் போட்டி லா சினிஃப் பிரிவில் இடம் பெற்ற இந்தியத் திரைப்படப் பள்ளியின் ஒரே திரைப்படமாக இது உள்ளது.
77வது கேன்ஸ் திரைப்பட விழாவில் கேன்ஸ் கிளாசிக் பிரிவில் இந்தியாவின் முதல் க்ரவுட் ஃபண்ட் திரைப்படமாக ’மந்தன்’ திரையிடப்பட்டுள்ளது. காட்சிப்படுத்தப்பட்டது. 48 ஆண்டு பழமையான கிளாசிக் திரைப்படமான இதில், பழம்பெரும் நடிகை ஸ்மிதா பாட்டில் நடித்துள்ளார்.

இயக்குநர் ஷியாம் பெனகல் படத்தை இயக்கியுள்ளார். இளம் கால்நடை அறுவை சிகிச்சை நிபுணர் ஒருவர், ஒரு கிராமத்தின் வளர்ச்சிக்காக என்னென்ன செய்கிறார் என்பதுதான் கதைக்களம். கணவன் - மனைவிக்கு இடையே நடைபெறும் கருத்து வேறுபாட்டை மையமாகக் கொண்டு உருவான கதைதான் ’சிஸ்டர் மிட்நைட்’. கரண் காந்தாரி இயக்கியுள்ள இந்தப் படத்தில் நடிகை ராதிகா ஆப்தே நடித்துள்ளார்.
ஈரானில் பிறந்த இந்தியத் திரைப்படத் தயாரிப்பாளரான மைசம் அலியின் திரைப்படம் ‘Retreat'. கேன்ஸ் திரைப்பட விழாவில் திரையிடப்பட தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கும் இந்தப் படம் 75 நிமிடங்கள் ரன் டைம் கொண்டது. இலையுதிர்காலத்தின் இறுதிக்கும் குளிர்காலத்தின் தொடக்கத்திற்கும் இடையில் அமைக்கப்பட்ட, பெயர் தெரியாத நாடோடியாக ஹரிஷ் கண்ணா நடித்துள்ளார். இயக்குநர் கான்ஸ்டான்டின் போஜனோவ் இயக்கத்தில் உருவான இந்தத் திரைப்படம் இந்திய பாலியல் தொழிலாளியான ராணியின் பயணத்தை விவரிக்கிறது.
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
இனி உச்சம்... பணமழை கொட்டப்போகும் ராசிகள்!
அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!
