மிசோரம் மாநிலத்தில் சுதந்திரத்திற்கு பின் முதல் ரயில் நிலையம்... செப்.13ல் பிரதமர் மோடி தொடங்கி வைக்கிறார்!

 
ரயில் மிசோரம்

இந்தியாவில் வடகிழக்கு மாகாணங்களில் மிசோரம்  மாநிலத்தின் மொத்த நிலப்பரப்பில் 91 சதவீதம் காடுகள்தான் அமைந்துள்ளது. இந்தியா சுதந்திரம் அடைந்து 75 ஆண்டுகள் ஆனபோதும் மிசோரம் தலைநகர் ஐஸ்வால் ரயில் போக்குவரத்துடன் இணைக்கப்படவில்லை. மிசோரமில்  ஒரு பகுதியான பைராபி வரை மட்டுமே ரயில் போக்குவரத்து இருந்து வந்தது. அஸ்ஸாம் மாநிலம் சில்சாரில் இருந்து பைராபி வரையிலான இவ்வழித்தடம்  2016ம் ஆண்டு மே மாதம்தான் பிரதமர் மோடியால் தொடங்கி வைக்கப்பட்டது. இவ்வழித்தடத்தின் ரயில் பாதை சுமார் 103 கிலோமீட்டர் என்ற போதிலும் அஸ்ஸாம் மாநில எல்லைக்குள்தான் இவ்வழித்தடத்தின் பெரும்பாலான பகுதி அமைந்துள்ளது. 

மோடி

இந்தியாவில் ‘குறைவான ரயில்பாதை கொண்ட மாநிலம் மிசோரம்' என்ற பெயரும் இருந்தது. அதைப்போக்கும் வகையில், மிசோரத்தின் பைராபி முதல் சாய்ராங் இடையே 51.38 கிலோமீட்டர் தூரத்துக்கு புதிய ரயில் பாதை அமைத்து மிசோரமின் தலைநகரான ஐஸ்வாலை இணைத்து ரயில் போக்குவரத்து பட்டியலில் அதனை கொண்டுவர 1999ல் ஆட்சியில் இருந்த காங்கிரஸ் அரசு முடிவு செய்தது. சாய்ராங், மிசோரமின் தலைநகரான ஐஸ்வாலுக்கு மிக அருகில்தான் உள்ளது. ஆனால் இந்த திட்டம் கைவிடப்பட்டது.   பின்னர், 2014ம் ஆண்டு பிரதமராக மோடி பொறுப்பேற்றதும்  அதே ஆண்டு நவம்பர் 29ம் தேதி இத்திட்டத்துக்கு அடிக்கல் நாட்டியுள்ளார்.  இத்திட்டத்தை அமைப்பதற்கு நடைமுறையில் உள்ள சிக்கல்கள், பிரச்சினைகள் அனைத்தையும் தாண்டி எப்படியாவது நடைமுறைக்கு கொண்டுவர தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் ரயில்வே அமைச்சகம் மேற்கொண்டது.

மிசோரம்

இதன் காரணமாக இத்திட்டத்துக்கான 51.38 கிலோமீட்டர் தூர ரயில் பாதையில், 5 ரயில் நிலையங்கள், 12.48 கிலோமீட்டர் நீளமுள்ள மலைகளை குடைந்து 48 சுரங்கப்பாதைகள், 55 உயரமான பாலங்கள், 87 சிறிய பாலங்கள், 5 சாலை மேம்பாலங்கள் உருவாக்கப்பட்டன. இத்திட்டத்தின் மூலம் சாய்ராங் ரயில் நிலையம் உலகத்தரத்தில் மேம்படுத்தப்பட்டுள்ளது. ரூ.8,071 கோடி செலவில் இந்த ரயில் பாதையை ரெயில்வேத்துறை நேர்த்தியாக வடிவமைத்து சாதனை புரிந்துள்ளது. இந்தப்பாதை ஐஸ்வாலை அசாமின் சில்சார் நகரத்துடனும், நாட்டின் பிற பகுதிகளுடனும் இணைக்கும். இந்த ரயில் நிலையத்தை  செப்டம்பர் 13ம் தேதி பிரதமர் மோடி தொடங்கி வைக்க உள்ளார்.

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்

பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!

நாப்கின்களால் ஏற்படும் ரேசஸ் மற்றும் எரிச்சலை போக்க இயற்கை வழிகள்!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?