பிரிட்டன் தேர்தலில் வென்ற முதல் தமிழ் பெண்... முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து!

 
பிரிட்டன் உமா குமரன்

பிரிட்டன் தேர்தலில் வென்று, நாடாளுமன்ற உறுப்பினரான முதல் தமிழ்ப் பெண்ணான உமா குமரனுக்கு,  “தமிழர்களுக்குத் தாங்கள் மிகப் பெரும் பெருமையைத் தேடித் தந்துள்ளீர்கள்” என்று  தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.


இது தொடர்பாக தமிழக முதல்வர் தனது சமூக வலைதளப் பக்கத்தில், “பிரிட்டனின் ‘ஸ்ட்ராட்ஃபோர்ட் அண் போ’ நாடாளுமன்றத் தொகுதியின் முதல் உறுப்பினரும், பிரிட்டானிய நாடாளுமன்ற உறுப்பினராகத் தேர்வாகியுள்ள முதல் தமிழ்ப் பெண்மணியுமாகிய உமா குமரனுக்கு நெஞ்சார்ந்த வாழ்த்துகள். தமிழர்களுக்குத் தாங்கள் மிகப்பெரும் பெருமையைத் தேடித் தந்துள்ளீர்கள்!” என்று முதல்வர் பதிவிட்டுள்ளார்.

உமா குமரன்

முன்னதாக, பிரிட்டன் நாடாளுமன்ற தேர்தலில் ஸ்ட்ராட்ஃபோர்ட் மற்றும் போ நாடாளுமன்ற தொகுதியில் வெற்றி பெற்றுள்ளார் உமா குமரன். இலங்கை வம்சாவளி தமிழரான இவர் லேபர் கட்சி சார்பில் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளார். அந்தக் கட்சி பிரிட்டனில் சுமார் 14 ஆண்டுகளுக்கு பிறகு ஆட்சி அமைந்துள்ளது. அவர் போட்டியிட்ட தொகுதியில் மொத்தம் 54.18 சதவீத வாக்காளர்கள் தங்களது வாக்குகளை செலுத்தினர். அதில் 19,415 வாக்குகளை உமா குமரன் பெற்று வெற்றி பெற்றுள்ளார்.

காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!

From around the web