சூப்பர்... இந்தியாவில் முதன்முறையாக ஏர் இந்தியா விமானங்களில் இன்-ஃப்ளைட் வை-ஃபை!
இந்தியாவிலேயே முதன்முறையாக உள்நாட்டு விமானங்களில் இன்-ஃப்ளைட் வை-ஃபை இணைப்பு வசதியை ஏர் இந்தியா வழங்கி சாதனை படைத்துள்ளது. இந்த சேவையின் மூலம், 10,000 அடி உயரத்திற்கு மேல் விமானத்தில் பறக்கும் போது அதிவேக இணைய சேவையை பயன்படுத்தலாம். ஏர் இந்தியாவின் ஏர்பஸ் A350, போயிங் 787-9 மற்றும் தேர்ந்தெடுக்கப்பட்ட சில ஏர்பஸ் A321neo விமானங்களில் பயணம் செய்யும் பயணிகள் தற்போது தங்கள் பயணத்தின் போது வை-பை சேவையை பயன்படுத்திக் கொள்ள முடியும்.
இந்த இலவச சேவை பயணிகள் தங்கள் லேப்டாப், டேப்லெட் மற்றும் ஸ்மார்ட்போன்கள் உட்பட வை-ஃபை மூலம் இயங்கும் அனைத்து கருவிகளிலும் பயன்படுத்த முடியும். சர்வதேச தடங்களில் ஏர் இந்தியா இந்த புதிய வைபை வசதிக்கான சோதனை திட்டத்தை வெற்றிகரமாக நடத்தியுள்ளது. இதனைத் தொடர்ந்து தற்போது இந்த சேவை விரிவாக்கப்பட உள்ளது. இன்-ஃப்ளைட் வை-ஃபை சேவையை பயன்படுத்த, பயணிகள் தங்கள் லேப்டாப், ஸ்மார்ட்போன் இவைகளை பயன்படுத்தி "ஏர் இந்தியா வை-ஃபை" நெட்வொர்க்குடன் எளிதாக இணைக்கலாம்.
இணைந்ததும், அவர்கள் தங்கள் PNR மற்றும் கடைசி பெயரை உள்ளீடுசெய்து இந்த சேவையை பயன்படுத்த முடியும். இந்த Internship-க்கு 3 லட்சம் செலவு ஆகும்.ஆனா… - நான் முதல்வன் திட்டம் பற்றி விவரித்த ஜப்பான் குழு ஏர் இந்தியா இந்த சேவையை அனைத்து விமானங்களிலும் விரிவுபடுத்த டாடா நிர்வாகம் திட்டமிட்டுள்ளது. இன்-ஃப்ளைட் வை-ஃபையின் கிடைக்கும் தன்மை செயற்கைக்கோள் இணைப்பு, ஸ்பெக்ட்ரம் பேண்ட்வித் பயன்பாடு மற்றும் அரசு விதிமுறைகள் உட்பட பல்வேறு காரணிகளைப் பொறுத்து இத்திட்டத்தின் வெற்றி அமையும்.
2025 புத்தாண்டு இந்த 6 நட்சத்திரத்தில் பிறந்தவங்களுக்கு தான் அதிர்ஷ்ட மழை!
மார்கழி மாத விரத முறைகள், வழிபாடு, பலன்கள்!
ஐயப்பன் பக்தர்கள் தெரிஞ்சிக்கோங்க ... சபரிமலை சுவாரஸ்யங்கள்!