ஸ்டார்லைனரில் முதல் பயணம்... 3வது முறையாக விண்வெளிக்கு செல்கிறார் சுனிதா வில்லியம்ஸ்!

 
சுனிதா வில்லியம்ஸ்

இந்திய வம்சாவளியைச் சேர்ந்த சுனிதா வில்லியம்ஸ், ஏற்கெனவே இருமுறை விண்வெளிக்கு சென்று திரும்பிய நிலையில், மூன்றாவது முறையாக விண்வெளிக்கு பயணப்பட உள்ளார். இதற்கு முன்பாக கடந்த இருமுறையும் டிஸ்கவரி விண்கலம் மூலமாக சென்று வந்த சுனிதா வில்லியம்ஸ், தற்போது முதல் முறையாக போயிங் ஸ்டார்லைனர்  மூலமாக விண்வெளிக்குப் பயணப்பட உள்ளார். 

சுனிதா வில்லியம்ஸ்

விண்வெளியில் சர்வதேச விண்வெளி மையத்தை அமைத்துள்ள ரஷ்யாவும், அமெரிக்காவும், விண்வெளியில் ஆய்வுகளை மேற்கொள்வதற்காக சுழற்சி முறையில் வீரர்கள்- வீராங்கனைகள் அனுப்பி வைக்கப்படுவது வழக்கம். இதற்கு முன்பு நாசாவில் இருந்து இருமுறை விண்வெளிக்கு சென்று வந்துள்ள சுனிதா வில்லியம்ஸ், அதிக விண்வெளி நடைபயணம் மேற்கொண்ட வீராங்கனை, அதிக நேரம் விண்வெளியில் நடைபயணம் மேற்கொண்டவர் என்று பல்வேறு சாதனைகளையும் படைத்துள்ளார். 

சுனிதா வில்லியம்ஸ்
தற்போது இந்திய வம்சாவளியை சேர்ந்த சுனிதா வில்லியம்ஸ் 3வது முறையாக விண்வெளிக்கு செல்கிறார். இவருடன், விண்வெளி வீரர் புட்ச் வில்மோர் ஆகியோர்  போயிங் ஸ்டார்லைனர் விண்கலத்தில் ஏறிச் சென்று, சுற்றுப்பாதையில் செல்லும் ஆய்வகத்தில் ஒரு வார காலம் தங்கி இருந்து ஆராய்ச்சி மேற்கொள்வார்கள் என்று நாசா அறிக்கை வெளியிட்டுள்ளது.மே 6ம் தேதி இந்திய நேரப்படி இரவு 10:34 மணிக்கு, புளோரிடாவில் உள்ள கேப் கனாவெரல் ஸ்பேஸ் ஃபோர்ஸ் ஸ்டேஷனில் உள்ள விண்வெளி ஏவுதள வளாகம்-41ல் இருந்து ராக்கெட் ஏவப்படுகிறது.

இனி உச்சம்... பணமழை கொட்டப்போகும் ராசிகள்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

From around the web