மீன்கள் வரத்து அதிகரிப்பால் விலை குறைந்தது... பொதுமக்கள் மகிழ்ச்சி!

மீன்களின் வரத்து அதிகரித்து இருந்ததால் திரேஸ்புரம் நாட்டுப்படகு மீன் ஏலக்கூடத்தில் மீன்கள் விலை குறைந்து விற்பனையானது. இன்று அதிகாலை மீன் வாங்க வந்த பொதுமக்கள் மீன்கள் விலை குறைப்பால் மகிழ்ச்சியடைந்தனர். தூத்துக்குடியில் மீன்பிடி தடை காலத்தை முன்னிட்டு விசைப்படகு மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்க செல்லாமல் இருந்தனர். இதன் காரணமாக தூத்துக்குடி திரேஸ்புரம் நாட்டுப்படகு மீன்பிடி துறைமுகத்தில் நாளுக்கு நாள் மீன்களின் விலை உயர்ந்து காணப்பட்டது. ஆனால் தடை காலம் முடிவடைந்ததை தொடர்ந்து கடந்த சில வாரங்களாக விசைப்படகு மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்கு செல்வதால் மீன்களில் விலை குறைய ஆரம்பித்தது.
இந்நிலையில் தூத்துக்குடி திரேஸ்புரம் நாட்டுப்படகு மீன்பிடி துறைமுகத்தில் இருந்து ஆழ்கடலுக்கு மீன் பிடிக்கச் சென்ற ஏராளமான நாட்டுப்படகு மீனவர்கள் நேற்று கரைக்கு திரும்பினர். ஆழ்கடலுக்கு சென்று வந்த இந்த நாட்டுப்படகு மீனவர்களுக்கு, மீன்பாடு நன்றாக இருந்ததால் நேற்று திரேஸ்புரம் மீன்பிடி துறைமுகத்தில் மீன்களின் வரத்து அதிகரித்து காணப்பட்டது. மீன்களின் வரத்து அதிகரித்து இருந்ததால் திரேஸ்புரம் நாட்டுப்படகு மீன் ஏலக்கூடத்தில் மீன்கள் விலை குறைந்து காணப்பட்டது.
அதன்படி விளைமீன், ஊளி, பாறை ஆகிய மீன்கள் கிலோ ரூ.250 முதல் ரூ.350 வரையும், குறுவலை மீன் ரூ.350 வரையும், தோல்பாறை மீன் ரூ.200 வரையும், வங்கனை மீன் ரூ.100 முதல் ரூ.130 வரையும் விற்பனையானது. வரத்து குறைவின் காரணமாக சீலா மீன் கிலோ ரூ.1000-க்கு விற்பனை செய்யப்பட்டது. மீன்களின் விலை குறைந்து காணப்பட்டதால் ஏராளமான பொதுமக்கள் மீன்களை ஆர்வமுடன் வாங்கி சென்றனர்.
இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்
பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!
நாப்கின்களால் ஏற்படும் ரேசஸ் மற்றும் எரிச்சலை போக்க இயற்கை வழிகள்!!