மீனவர்கள் திடீர் சாலை மறியல்... நடுரோட்டில் முழங்காலிட்டு பெண்கள் கதறல்!
இன்று அதிகாலை இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்களை மீட்டுத்தரகோரி, மீனவர்கள் பாம்பன் பாலத்தில் திடீர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் அந்த பகுதியில் பரபரப்பு நிலவி வருகிறது. போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
கடந்த ஜூன் 22ம் தேதி ராமேஸ்வரம் மற்றும் புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த 22 மீனவர்களை இலங்கை கடற்படை கைது செய்திருந்தது. இதனிடையே இன்று அதிகாலை 25 ராமேஸ்வரன் மீனவர்களை கைது செய்துள்ள இலங்கை கடற்படை, அவர்கள் சென்ற 4 விசைப்படகுகளையும் பறிமுதல் செய்துள்ளது.ஏற்கனவே கைது செய்யப்பட்ட 22 மீனவர்களை விடுதலை செய்ய இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படாத நிலையில், தற்போது மீண்டும் மீனவர்கள் கைது செய்யப்பட்டு இருப்பது ராமேஸ்வரம் பகுதி மீனவர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதனை கண்டிக்கும் வகையில் இன்று பாம்பன் பாலத்தில் மீனவர்கள் திடீர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.கைது செய்யப்பட்ட மீனவர்களின் உறவினர்கள் மற்றும் பெண்கள், பாலத்தின் மீது நடுரோட்டில் முழங்காலிட்டு, மீனவர்களை விடுதலை செய்யக்கோரி கண்ணீர் மல்க கோரிக்கை விடுத்தனர்.

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த ராமேஸ்வரம் போலீசார் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி சாலை மறியலை கைவிடுமாறு கோரிக்கை விடுத்தனர். இதையடுத்து மீனவர்கள் அங்கிருந்து கடல் மணல் பரப்பில் இறங்கி போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். தொடர் கைது சம்பவங்களால் ராமேஸ்வரம் பகுதியில் தொடர்ந்து பரபரப்பான சூழல் நிலவி வருவதால், அங்கு ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பணிகள் பலப்படுத்தப்பட்டுள்ளது.
காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!
