தூத்துக்குடி, குமரியில் மீன்கள் விலை உயா்வால் மீனவா்கள் மகிழ்ச்சி!

 
மீன்

கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு கன்னியாகுமரி, தூத்துக்குடி மாவட்டங்களில் மீன்கள் விலை உயா்ந்து விற்பனையானதால் மீனவா்கள் மகிழ்ச்சி அடைந்தனா்.

வங்கக் கடலில் உருவான புயல் காரணமாக தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த மாதம் 26ம் தேதி முதல் இந்த மாதம் 15ம்  தேதி வரை மீனவர்கள் சரியாக மீன்பிடிக்க கடலுக்கு செல்லவில்லை. பின்னர் சகஜநிலை திரும்பியதை தொடர்ந்து கடந்த 16ம் தேதி முதல் மீனவர்கள் மீண்டும் கடலுக்கு மீன்பிடிக்க சென்றனர்.

மீன் மார்க்கெட்

இந்நிலையில் புயலுக்கு பின்னர் தூத்துக்குடி திரேஸ்புரம் நாட்டுப்படகு மீன்பிடி துறைமுகத்தில் இருந்து ஆழ்கடலுக்கு மீன்பிடிக்க சென்ற ஏராளமான நாட்டுப்படகு மீனவர்கள் நேற்று கரைக்கு திரும்பினர். ஆழ்கடலுக்கு சென்று மீன் பிடித்து வந்த நாட்டுப்படகு மீனவர்களுக்கு நல்ல மீன் பாடு இருந்ததால், தூத்துக்குடி திரேஸ்புரம் நாட்டுப்படகு மீன்பிடி துறைமுகத்தில் நேற்று மீன்களின் வரத்து அதிகமாக காணப்பட்டது.

வழக்கம் போல் மீன்கள் வாங்க பொதுமக்கள் கூட்டமும், வியாபாரிகள் கூட்டமும் அலைமோதியது. இதன் காரணமாக மீன்களுக்கு நல்ல விலை கிடைத்தது. பொதுவாக மார்கழி மாதத்தில் மீன்கள் விலை குறைந்து காணப்படும். மீன்களுக்கு நல்ல விலை கிடைக்காது. ஆனால் கிறிஸ்துமஸ் பண்டிகை வருவதை முன்னிட்டு நேற்று மீன்களின் விலை உயர்ந்தது.

மீன் மீன்கள் இறைச்சி மீனவர்கள

திரேஸ்புரம் நாட்டுப்படகு மீன்பிடி துறைமுகத்தில் நேற்று ஒரு கிலோ பெரிய சீலா மீன் ரூ.1,200 வரை விற்பனையானது. அதுபோல் சிறிய சீலா மீன்கள் ரூ.800 வரை விற்பனையானது. மேலும் விளை மீன் மற்றும் ஊளி மீன்கள் கிலோ ரூ.500 வரையும், பாறை மீன் கிலோ ரூ.450 முதல் 500 வரையும், வாளை மீன் கிலோ ரூ.250 வரையும், நண்டு கிலோ ரூ.400 வரையும் விற்பனையானது. மீன்களுக்கு நல்ல விலை கிடைத்ததால் மீனவர்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

மார்கழி மாத விரத முறைகள், வழிபாடு, பலன்கள்!

ஐயப்ப பக்தர்கள் தினசரி சொல்ல வேண்டிய ஸ்லோகம் இது தான்!

ஐயப்பன் பக்தர்கள் தெரிஞ்சிக்கோங்க ... சபரிமலை சுவாரஸ்யங்கள்!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

From around the web