மீனவர்கள் கரைக்கு திரும்ப உத்தரவு... கடலோர காவல்படை எச்சரிக்கை!!

தென்கிழக்கு மற்றும் கிழக்கு மத்திய வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி உருவாகியுள்ளது. இது வலுப்பெற்று புயலாக மாறக்கூடும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இதனால் அடுத்த 7 நாட்களுக்கு தமிழகத்தில் புயல் காற்றுடன் மழை பெய்யக்கூடும். அத்துடன் நாளை முதல் வடகிழக்கு பருவமழையும் தொடங்க உள்ளது.இதன் அடிப்படையில் கடலுக்குள் மீன்பிடிக்க சென்ற மீனவர்களை கரைக்கு திரும்ப எச்சரிக்கை விடுத்துள்ளது. ஆந்திரா மற்றும் தமிழக கடலோரப் பகுதிகளில் செயல்படும் மீனவர்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக துறைமுகத்திற்குத் திரும்ப அறிவுறுத்தியுள்ளன.
இந்திய வானிலை ஆய்வு மையம் இது குறித்து வெளியிட்ட செய்திக்குறிப்பில் நாளை அக்டோபர் 22ம் தேதி குறைந்த காற்றழுத்த தாழ்வுநிலை காற்றழுத்த தாழ்வு மண்டலமாக உருவாகி வடமேற்கு நோக்கி நகரக்கூடும். அடுத்த 3 நாட்களில் மேலும் தீவிரமடையும். சென்னையை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் .ஆந்திரா மற்றும் தமிழக கடற்கரையை ஒட்டியுள்ள கடற்பரப்பில் பல கப்பல்களை தயாராக நிறுத்தியுள்ளது.
காற்றழுத்த தாழ்வு நிலை மேலும் தீவிரமடைவதற்குள் சிறிய படகுகள் மற்றும் படகுகள் பாதுகாப்பாக துறைமுகத்திற்கு திரும்ப அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஆந்திரா மற்றும் தமிழக கடலோர மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம், கப்பல்கள் பாதகமான கடல் சூழலுக்கு போதுமான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்கவும் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.
இந்திய கடலோர காவல்படை, அதன் குறிக்கோளான "வயம் ரக்ஷாமா" அதாவது "நாங்கள் பாதுகாக்கிறோம்" என்ற குறிக்கோளை காக்க உறுதி மேற்கொண்டுள்ளது, மேலும் கடலில் உள்ள கடற்படையினருக்கு உதவ சூறாவளி புயல்கள் உட்பட எந்தவொரு நிகழ்வையும் சமாளிக்க தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது.
ஐப்பசி மாத புனித நீராடலின் மகத்துவம்.. மிஸ் பண்ணீடாதீங்க!!
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
கிடுகிடுவென உடல் எடை குறைய தினம் இந்த பழம் சாப்பிட்டு பாருங்க...!!
ஐஸ்வர்யங்களை அள்ளித் தரும் ஐப்பசி மாத பண்டிகைகள், சிறப்புக்கள்!!