மீன்பிடி தடைக்காலம்... மீன்கள் விலை கடும் உயர்வு... ஏமாற்றத்துடன் திரும்பிய மக்கள்!

 
மீன்பிடித் தடைக்காலம்

மீன்பிடி தடைக்காலம் இன்னும் முடிவடையாததாலும், மீன்களின் வரத்து குறைவாக இருப்பதால் தூத்துக்குடி திரேஸ்புரம் நாட்டுப்படகு மீன்பிடி துறைமுகத்தில் மீன்களின் விலை கடுமையாக உயர்ந்து காணப்பட்டதால் இன்று ஆர்வமுடன் மீன் வாங்க வந்த மக்கள் ஏமாற்றத்துடன் வாங்காமலேயே திரும்பி சென்றனர்.

தூத்துக்குடி திரேஸ்புரம் நாட்டு படகு மீன்பிடி துறைமுகத்தில் இன்று விடுமுறை மற்றும் சனிக்கிழமை என்பதால் மீன்களை வாங்க பொதுமக்களின் கூட்டம் அலைமோதியது. இந்நிலையில் கேரளாவில் கடந்த ஜூன் ஒன்றாம் தேதி முதல் மீன்பிடி தடைக்காலம் அமலுக்கு வந்ததாலும் தமிழகத்தில் ஏற்கனவே விசைப்படகுகள் மீன்பிடிக்க தடைக்காலம் வருகிற ஜூன் 15 ஆம் வரை தேதி வரை அமலில் இருப்பதாலும் திரேஸ்புரம் மீன்பிடி துறைமுகத்திலிருந்து நாட்டுப் படகு மற்றும் பைபர் படகுகள் கடலுக்கு மீன்பிடிக்க செல்கின்றன. 

கடந்த ஒரு வார காலமாக கடல் பகுதியில் பலத்த காற்று வீசி வருவதால் குறைவான படகுகுகளே கடலுக்கு சென்றன. தங்கு கடல் மீன் பிடிப்பிற்கு சென்று இன்று கரைக்கு திரும்பிய படகுகளில் பலத்த காற்று காரணமாக மீன்களின் வரத்து குறைவாக காணப்பட்டது. இதன் காரணமாகவும் கேரளாவுக்கு அதிக அளவு மீன்கள் ஏற்றுமதி செய்யப்படுவதால் மீன்களின் விலை கடுமையாக உயர்ந்து காணப்பட்டது.

ஒரு கிலோ சீலா 1500 ரூபாய் வரையும், ஒரு கிலோ விளை மீன் 700 ரூபாய் வரையும், ஊளி மற்றும் பாறை மீன்கள் ஒரு கிலோ 600 ரூபாய் வரையும், அயிலேஷ் கிலோ 300 ரூபாய் வரையும், கேரை மற்றும் சூரை மீன்கள் கிலோ 300 ரூபாய் வரையும், நண்டு ஒரு கிலோ 500 ரூபாய் வரையும், பறவை மீன்கள் கிலோ 250 ரூபாய் வரை விற்பனையானது. சாளை மீன் வரத்து முற்றிலும் இல்லாததால் சிறிய வியாபாரிகள் கவலை அடைந்தனர். 

மீன்களின் விலை கடுமையாக உயர்ந்துள்ளதால் பொதுமக்கள் ஏமாற்றத்துடன் திரும்பினர். வியாபாரிகள் அதிக விலை கொடுத்து வாங்கினர். ஜூன் 15ம் தேதிக்கு பிறகு விசைப்படகுகள் கடலுக்குச் சென்ற பின்பு மீன்களின் வரத்து அதிகம் காணப்பட்டால் மீன்களின் விலை குறைய வாய்ப்பு என மீனவர்கள் தெரிவித்தனர்.

காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!

From around the web