முதியோர் 5 பேர் பலி.. முதியோர் இல்லத்திற்கு சீல் வைப்பு... தூத்துக்குடி காப்பகத்திற்கு மாற்றம்!

 
தென்காசி

தென்காசி முதியோர் இல்லத்தில் அசைவ உணவு சாப்பிட்டதில் 5 பேர் உயிரிழந்த நிலையில், தென்காசி மாவட்டத்தில் முதியோர் இல்லத்திற்கு சீல் வைக்கப்பட்டது. இது குறித்த விசாரணை நடைபெற்று வரும் நிலையில், முதியோர் இல்லத்தில் இருந்த 5 முதியவர்கள் தூத்துக்குடி காப்பகத்தில் சேர்க்கப்பட்டனர். 

தென்காசி மாவட்டம், சுந்தர பாண்டியபுரத்தில் முதியோர் இல்லத்தில் மாமிச உணவு அருந்திய 5 பேர் உயிரிழந்த சம்பவத்தையடுத்து முதியோர் இல்லத்திற்கு மாவட்ட ஆட்சியர் உத்தரவின் பேரில் அதிகாரிகள் சீல் வைத்தனர்.

தென்காசி ஆட்சியர் கலெக்டர்

அதன் காரணமாக அங்கு தங்கி இருந்த முதியோர்களை மருத்துவ பரிசோதனைக்காக தென்காசி அரசு தலைமை மருத்துவமனை மற்றும் திருநெல்வேலி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். 

போலீஸ்

சிகிச்சைக்கு பின்னர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட முதியோர்களை வேறு முதியோர் இல்லத்திற்கு மாற்றம் செய்ய அறிவுறுத்தப்பட்டது. இதில், தென்காசி மாவட்ட சமூக நல அலுவலர் பரிந்துரையின் பெயரில் தூத்துக்குடி மாவட்டம் கூட்டாம்புளி கிராமம் அன்பு உள்ளங்கள் முதியோர் இல்லத்தில் ஒரு ஆண் மற்றும் 4 பெண்கள் என மொத்தம் 5 முதியோர்கள் பராமரிப்பிற்காக சேர்க்கப்பட்டுள்ளனர்.

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்

பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!

நாப்கின்களால் ஏற்படும் ரேசஸ் மற்றும் எரிச்சலை போக்க இயற்கை வழிகள்!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது