செண்டர் மீடியனில் அரசுப்பேருந்து மோதி பெண்கள் உட்பட 5 பேர் படுகாயம்!

திருவாரூர் மாவட்டத்தில் இருந்து அரசு பேருந்து ஒன்று திருத்துறைப்பூண்டி நோக்கி சென்று கொண்டிருந்தது. இந்த பேருந்தில் 25 பேர் பயணம் செய்தனர். இந்நிலையில் திருத்துறைப்பூண்டி புறவழிச்சாலை பகுதியில் உள்ள செண்டர் மீடியனில் பேருந்து நிலை தடுமாறி நேரடியாக மோதியுள்ளது. இதில், பேருந்தில் பயணித்த பெண்கள் உட்பட 5 பேர் படுகாயம் அடைந்துள்ளனர்.
உடனடியாக அவர்கள் அனைவரும் மீட்கப்பட்டு திருத்துறைப்பூண்டி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு அங்கு மருத்துவர்கள் அவருக்கு தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.
குறிப்பாக அரசு பேருந்து செண்டர் மீடியனில் மோதிய போது அங்கிருந்த பொது மக்கள் உடனடியாக அங்கு வந்த ஆம்புலன்ஸ் மூலமாக மீட்டு உடனடியாக அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். இச்சம்பவம் குறித்து திருத்துறைப்பூண்டி காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்
பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!
நாப்கின்களால் ஏற்படும் ரேசஸ் மற்றும் எரிச்சலை போக்க இயற்கை வழிகள்!!