5 தேசிய நெடுஞ்சாலைகள் முற்றிலுமாக மூடல்... வெள்ளத்தில் மிதக்கும் பஞ்சாப், இமாச்சல், உத்தரகாண்ட், ஜம்மு மாநிலங்கள்!

 
கனமழை வெள்ளம்

இமாச்சலப்பிரதேசம் மற்றும் உத்தரகாண்ட்டில் திடீர் நிலச்சரிவு ஏற்பட்டது. இதன் காரணமாக ஒரே குடும்பத்தை சேர்ந்த 2 பேர் உட்பட 6 பேர் பலியாகி இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளன.  இமாச்சலப்பிரதேசத்தில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. மழையில் சிம்லா மாவட்டம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. மழை காரணமாக மாவட்டத்தில் 2  இடங்களில் நேற்று முன்தினம் நிலச்சரிவு ஏற்பட்டது.  

லாரி லாரிகள் ஜம்மு காஷ்மீர்

இதில் தந்தை மற்றும் அவரது 10 வயது மகள் பரிதாபமாக உயிரிழந்தனர். இதேபோல் கோட்காய் பகுதியில் சோல் கிராமத்தில் வீடு இடிந்து விழுந்ததில் வயதான பெண்மணி  ஒருவர் மண்ணில் புதைந்தார்.  சிர்மவுரின் சவ்ராஸ் பகுதியில் மற்றொரு வீடும் இடிந்து விழுந்தது. ரோஹ்ரு பகுதியில் உள்ள மோரி கிராமத்தில் நிலச்சரிவு ஏற்பட்ட நிலையில் ஒரு பெண் மாயமானார்.

கனமழையால் பெங்களூரு சாலைகள், குடியிருப்புகளில் வெள்ளம்... படகுகள் மூலம் மக்கள் மீட்பு!

இந்த நிலச்சரிவு காரணமாக 6 ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது. மேலும் 793 சாலைகள் மூடப்பட்டுள்ளது. 6 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இது குறித்து முதல்வர் சுக்விந்தர் சிங் சுக்கு  விடுத்த செய்திக்குறிப்பில் “ நடுவழியில் சிக்கி தவித்த 15000 பக்தர்களில் 10ஆயிரம் பேர் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டனர். பாதிக்கப்பட்ட பகுதியில் மீட்பு பணிகள் முழு வீச்சில் நடந்து வருகின்றன  உத்தரகாண்டில் கேதார்நாத்தில் தேசிய நெடுஞ்சாலையில் நிலச்சரிவு ஏற்பட்டது. பாறைகள் மற்றும் மண்குவியல்கள் விழுந்ததில் சாலையில் சென்ற வாகனம் சிக்கியது. இதில் 2 பேர் பலியானார்கள். இதேபோல் பஞ்சாப், அரியானா மற்றும் சண்டிகரில் பல்வேறு இடங்களில் கனமழை பெய்துள்ளது.”

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்

பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!

நாப்கின்களால் ஏற்படும் ரேசஸ் மற்றும் எரிச்சலை போக்க இயற்கை வழிகள்!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?