பயங்கர விமான விபத்து.... கைக்குழந்தை உட்பட 12 பேர் உடல் கருகி பலி!!

 
விமான விபத்து

அக்டோபர் 29ம் தேதி  ஞாயிற்றுக்கிழமை நேற்று காலை சிறிய ரக விமானம் கீழே விழுந்து அதில்  பயணித்த 12 பேரும்  விபத்தில் உயிரிழந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இது குறித்து பிரேசில் கவர்னர்   கிளாட்சன் கேமிலியின் பத்திரிகை அலுவலகம் வெளியிட்ட செய்திக்குறிப்பில்  பிரேசிலின் ஏக்கர் மாநிலத்தின் தலைநகரான ரியோ பிராங்கோவில் உள்ள முக்கிய விமான நிலையம் அருகே விமானம் கீழே விழுந்துள்ளது.    

விமான விபத்து

விபத்து நடந்ததாகக் கூறப்படும் அந்த சிறிய விமானம் காட்டில் எரிந்தபடி காட்சிகள் காட்டி வருகின்றன.  இந்த விபத்தில் 12 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். அதன்படி  9   பெரியவர்கள் மற்றும் ஒரு கைக்குழந்தை, அத்துடன் விமானி மற்றும் துணை விமானி அனைவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர்.

விமான விபத்து


இதே போல், செப்டம்பர் மாதம் பார்சிலோஸ் நகரில் புயலின் போது தரையிறங்க முயன்ற விமானம் விபத்துக்குள்ளானதில் 14 பேர் உயிரிழந்தனர். கடந்த ஜூன் மாதம், அமேசான் காட்டில் நடந்த விமான விபத்தில் காணாமல் போன 4  குழந்தைகள் 40 நாட்கள் கழித்து தீவிர தேடுதலில் உயிருடன் மீட்கப்பட்டுள்ளனர் என்பது  குறிப்பிடத்தக்கது.

ஐப்பசி மாத புனித நீராடலின் மகத்துவம்.. மிஸ் பண்ணீடாதீங்க!!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

கிடுகிடுவென உடல் எடை குறைய தினம் இந்த பழம் சாப்பிட்டு பாருங்க...!!

ஐஸ்வர்யங்களை அள்ளித் தரும் ஐப்பசி மாத பண்டிகைகள், சிறப்புக்கள்!!

From around the web