தூத்துக்குடி புதிய முனையத்திலிருந்து விமான சேவைகள் தொடக்கம்! ​​​​​​​

 
தூத்துக்குடி விமான நிலையம்

தூத்துக்குடி மாவட்டத்தில்  விமான நிலையத்தில் ரூ.452 கோடி செலவில் புதிதாக விரிவாக்கம் செய்யும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வந்தன.  இந்த விமான நிலையத்தில் 3115 மீட்டர் நீளம் கொண்ட விமான ஓடுதளம், இரவு நேரத்தில் விமானம் தரையிறங்குவதற்கான வசதிகள், ஒரே நேரத்தில் ஐந்து ஏ321 ரக விமானங்களை நிறுத்தி வைக்கக்கூடிய வசதிகள் ஏற்படுத்தப்பட்டன. 

விமான நிலையம்

இந்த புதிய முனையத்தை பிரதமர் நரேந்திரமோடி கடந்த 26-ந்தேதி தொடங்கி வைத்துள்ளார்.  இதைத் தொடர்ந்து புதிய முனையத்தில் இருந்து விமானங்களை இயக்குவது, பயணிகள் முனைய செயல்பாடுகளை மேற்கொள்வதற்கான பணிகள் நடந்து வந்தன. 

விமான நிலையம்

இந்த பணிகள் அனைத்தும்  தற்போது நிறைவடைந்திருக்கும் நிலையில் விமான நிலையத்தின் புதிய முனையத்தில் இருந்து நேற்று முதல் விமான சேவை தொடங்கியிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்

பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!

நாப்கின்களால் ஏற்படும் ரேசஸ் மற்றும் எரிச்சலை போக்க இயற்கை வழிகள்!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?