அதிர்ந்த மனைவி... கள்ளக்காதலியுடன் உல்லாச வீடியோவை அனுப்பிய கணவன்!

 
ஜெய்சங்கர்

கள்ளக்காதலியுடன் உல்லாசமாக இருக்கும் வீடியோவை மனைவிக்கு அனுப்பி வைத்து, உன்னால் என்னை இப்படியெல்லாம் சந்தோஷப்படுத்த முடியாது என்று கூறிய கணவனால், மன உளைச்சலில் மனைவி தற்கொலைச் செய்து கொண்டுள்ளார். தற்கொலைக்கு தூண்டியதாக கணவனை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர். சேலம் மாவட்டம் தாரமங்கலம் அருகே துட்டம்பட்டி பகுதியை சேர்ந்தவர் ஜெய்சங்கர் (44). பெங்களூருவில் குடும்பத்துடன் தங்கி கல் உடைக்கும் தொழில் செய்து வந்தார். இவரது மனைவி சாந்தி (36). இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர். இருவரும் படிக்கிறார்கள். இந்நிலையில், ஜெய்சங்கருக்கு தனது உறவினர் சின்னப்பொண்ணு (43) என்பவருடன் பழக்கம் ஏற்பட்டு, அது தகாத உறவாக மாறியது. இந்த உறவு குறித்து அறிந்த சாந்தி, கணவரை கண்டித்துள்ளார். அதை கண்டுகொள்ளாத ஜெய்சங்கர், தகாத உறவை தொடர்ந்தார்.

இந்நிலையில் கடந்த மார்ச் மாதம் ஜெய்சங்கர் தனது காதலியுடன் நெருக்கமாக இருந்த ஆபாச வீடியோவை சாந்தியின் செல்போனுக்கு  அனுப்பியுள்ளார். அவரும், “இப்படி, என்னை உன்னால் சந்தோசப்படுத்த முடியாது” என்று சொல்லி அனுப்பினார். இதனால் மன உளைச்சலுக்கு ஆளான சாந்தி வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதையடுத்து ஜெய்சங்கர் மற்றும் அவரது காதலி சின்னப்பொண்ணு ஆகியோர் மீது தற்கொலைக்கு தூண்டியதாக போலீசார் வழக்கு பதிவு செய்தனர். அதன்பின், தலைமறைவாகி விட்டனர். இருவரையும் பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டது. ஆனால், போலீசில் சிக்காமல் டிமிக்கி கொடுத்து வந்தனர்.

இந்நிலையில் நேற்று தாரமங்கலம் அருகே பண்ணப்பட்டி பகுதியில் உறவினர் வீட்டில் பதுங்கியிருந்த இருவரையும் தனிப்படை போலீசார் சுற்றி வளைத்து பிடித்தனர். பின்னர், இருவரையும் காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்ற போலீஸார், இருவரையும் கைது செய்தனர். சின்னபொண்ணுக்கு திருமணமாகி 5 மகள்கள் மற்றும் ஒரு மகன் உள்ளனர். குடும்பத்தைப் பிரிந்து கடந்த ஒன்றரை மாதங்களாக ஜெய்சங்கருடன் ஊர் ஊராகச் சென்று வந்துள்ளார். ஜெய்சங்கருக்கு மேலும் 2 பெண்களுடன் தொடர்பு இருப்பதும் கண்டுபிடிக்கப்பட்டது.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

இனி உச்சம்... பணமழை கொட்டப்போகும் ராசிகள்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!