இளம்பெண்ணுடன் உல்லாசம்... ஏமாற்றிய போலீஸ்காரர் கைது!

 
கற்பழிப்பு போலீஸ்

கடலூர் மாவட்டத்தில், இளம்பெண் ஒருவருடன் உல்லாசமாக இருந்து விட்டு, தொடர்ந்து பாலியல் தொல்லைக் கொடுத்து வந்த நிலையில், திருமணம் செய்ய மறுத்த போலீஸ்காரர் கைது செய்யப்பட்டார்.கடலூர் மாவட்டம் சேடப்பாளையம் அருகே நாகம்மாள் பேட்டையை சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி மகன் சம்பத் (28).

இவர் தமிழ்நாடு சிறப்பு காவல் படையில் பணியாற்றி வருகிறார். இவர் கடந்த வருடம் திருநெல்வேலியில் பணியாற்றியபோது அங்கு கலெக்டர் அலுவலக தற்காலிக ஊழியராக இருந்த 28 வயது இளம்பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது.

சிறுமிக்கு பாலியல் சீண்டல்

இந்நிலையில் கடந்த டிசம்பர் மாதம் சம்பத் அந்த பெண்ணை கடலூருக்கு அழைத்து வந்து ஒரு தனியார் லாட்ஜில் அறை எடுத்து தங்கி, ஆசைவார்த்தை கூறி உல்லாசமாக இருந்துள்ளார். இதையடுத்து அந்த பெண் சம்பத்திடம் தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு கேட்டுள்ளார். ஆனால் அதற்கு மறுப்பு தெரிவித்து அவரை ஆபாசமாக திட்டி மிரட்டல் விடுத்துள்ளார்.

மாணவி பாலியல் வழக்கு!! ஆசிரியர் மிதுன் சக்கரவர்த்தி மீது  குண்டர் சட்டம்!!

இது குறித்து அந்த இளம்பெண், கடலூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் செய்தார். இந்த புகார் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க கடலூர் மாவட்ட எஸ்.பி. ஜெயக்குமார் உத்தரவிட்டார். அதன்படி கடலூர் அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் வழக்குப்பதிந்து சம்பத்தை நேற்று கைது செய்தனர். பின்னர் அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி கடலூர் சிறையில் அடைத்தனர்.

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்

பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!

நாப்கின்களால் ஏற்படும் ரேசஸ் மற்றும் எரிச்சலை போக்க இயற்கை வழிகள்!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?