10 மாவட்ட மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை... முழு கொள்ளளவை எட்டிய மேட்டூர் அணை!

கர்நாடக மாநிலத்தில் தொடர்ந்து பெய்து வரும் கனமழையால் கபினி, கிருஷ்ணராஜசாகர் அணைகள் நிரம்பி வழிகின்றன. இதனால் நேற்று முன்தினம் இரவு 8 மணிக்கு 86,800 கனஅடி நீர் வெளியேற்றப்பட்டது. நேற்று காலை அது 68,983 கனஅடியாக குறைக்கப்பட்ட நிலையில், ஒகேனக்கல் காவிரியில் நேற்று முன்தினம் இரவு 88,000 கனஅடியாக இருந்த நீர்வரத்து நேற்று பிற்பகல் 3 மணி நிலவரப்படி 70,000 கனஅடியாக சரிந்தது.அதே சமயம் மேட்டூர் அணைக்கான நீர்வரத்து அதிகரித்துள்ளது.
நேற்று முன்தினம் மாலை 4 மணிக்கு 60,740 கன அடியாக இருந்த நீர்வரத்து நேற்று பிற்பகல் 3 மணிக்கு 80,984 கனஅடியாக உயர்ந்தது. இதனால் அணையின் நீர்மட்டம், 117.93 அடியாக உயர்ந்துள்ளது. தற்போதைய நிலவரப்படி அணையின் நீர்மட்டம் 118 அடியை எட்டியதாலும், நீர்வரத்து அதிகரித்துள்ளதாலும் மேட்டூர் அணை எந்நேரத்திலும் நிரம்பும் வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அணை முழு கொள்ளளவை(120 அடி) எட்டும் பட்சத்தில் இன்று காலை உபரி நீர் 16 கண் மதகிலிருந்து தண்ணீர் வெளியேற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால், காவிரி கரையோரம் மற்றும் தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்கள் அனைவரும் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லும்படி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அதன்படி, சேலம், ஈரோடு, நாமக்கல், கரூர், திருச்சி, அரியலூர், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம் மற்றும் கடலூர் மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்
பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!
நாப்கின்களால் ஏற்படும் ரேசஸ் மற்றும் எரிச்சலை போக்க இயற்கை வழிகள்!!